Categories: latest news

வெயிலாவது மழையாவது.. காலுல விழுற சீனில் கொளுத்துற வெயிலில் தனுஷ் செஞ்ச விஷயம்

Actor Dhanush: தமிழ் சினிமாவில் சிவாஜி, கமல், விக்ரம் இவர்கள் வரிசையில் அடுத்ததாக தனுஷை நிச்சயமாக சொல்லலாம். சமீப கால படங்களில் தனுஷின் ஒரு அபாரமான நடிப்பு வெளிப்பட்டு கொண்டு இருக்கின்றது. ஆரம்பத்தில் ஒரு பிளேபாயாக நடித்துக் கொண்டிருந்த தனுஷ் அசுரன், கர்ணன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு ஆழமான கருத்தை தெரிவிக்கும் வகையில் படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கின்றார்.

இதன் மூலம் ரசிகர்களிடையே அவர் மீது அளவு கடந்த மரியாதையும் அன்பும் கூடிக் கொண்டே இருக்கின்றது. அசுரன் என்ற பெயருக்கு ஏற்ப அவருடைய நடிப்பு மிகவும் அசுரத்தனமாகவே இருக்கின்றது. நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் போகும் நடிகர் என்று தனுஷை சொல்லலாம். சொந்த வாழ்க்கையில் என்ன பிரச்சனை இருந்தாலும் அதை எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: மே மாசம் யார் யார் படங்கள் ரிலீஸ் ஆக போகுதுனு தெரியுமா? அடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை

தன்னுடைய அடுத்தடுத்த இடத்தை அடைவதற்கு கடின உழைப்பு போட்டுக் கொண்டு வருகிறார் தனுஷ். இந்த நிலையில் தனுஷை பற்றி நடிகர் ஆடுகளம் நரேன் ஒரு சூப்பரான தகவல் ஒன்றை கூறினார். வெற்றிமாறன் இயக்கிய அத்தனை படங்களிலும் ஆடுகளம் நரேனை பார்க்க முடியும். அந்த வகையில் அசுரன் திரைப்படத்திலும் ஆடுகளம் நரேன் நடித்திருப்பார்.

அசுரன் படத்தில் ஒரு சீனில் ஆடுகளம் நரேன் காலில் தனுஷ் விழுகிற மாதிரி காட்சி அமைந்திருக்கும். அந்த நேரத்தில் கொளுத்துகிற அளவுக்கு வெயில். அப்போது வெற்றிமாறனும் ஆடுகளம் நரேனும் இந்த வெயிலில் எப்படி தனுஷை இங்கே படுக்க வைத்து எடுப்பது என பேசிக்கொண்டு இருக்க உடனே ஆடுகளம் நரேன் முதலில் தனுஷை வைத்து குளோசப் எடுத்து விடுங்கள். அதன் பிறகு மாலை 3 மணி அளவில் ரோட்டில் தண்ணீர் ஊற்றி பிறகு தனுஷை படுக்க வைத்து அந்த ஷாட்டை எடுத்து விடலாம் என கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: யாரும் செய்யாத சாதனை!. இலங்கையிலும் அசால்ட் செய்த நடிகர் திலகம்!.. படம் இவ்வளவு நாள் ஓடியதா?!..

உடனே வெற்றிமாறன் இதை தனுஷிடம் போய் கூறுங்கள் என சொல்ல சொன்னாராம். ஆடுகளம் நரேனும் தனுஷிடம் போய் இதை சொல்ல அதற்கு தனுஷ் ஏற்கனவே சரியான வெயிலில் அந்த சண்டைக் காட்சியை எடுத்து விட்டோம். அதை ஒப்பிட்டு பார்க்கும்போது இது குற்றாலம் தான். ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன் என அந்த வெயிலிலும் ரோட்டில் படுத்து அந்த காலில் விழுகிற சீனில் நடித்தாராம் தனுஷ்.

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago