விமான நிலையத்தில் மாஸ் லுக்கில் அஜித்!...தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்...
வலிமை படத்திற்கு பின் அஜித் தற்போது மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக நீண்ட வெள்ளை நிற தாடியை அவர் வளர்த்துள்ளார். இப்படம் வங்கி கொள்ளையை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. தற்போது அடுத்தக்கட்ட பிடிப்பு ஆந்திராவில் உள்ள விஷாக பட்டிணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது, விமான பணியாளர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். மேலும், விமான தளத்தில் இருந்து விமானத்தில் ஏற பேருந்தில் அவர் பயணம் செய்தார்.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#AjithKumar sir ❤️ Latest Video From Chennai Airport.. #AK61 Final Schedule Starting Today ????#AK
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) August 16, 2022