பிடிக்காத நடிகர்!.. கேரவான் போறேன்னு வீட்டுக்கு போய்விட்ட அஜித்!.. இப்படி எல்லாம் நடந்துச்சா!..

Published on: May 27, 2023
ajith
---Advertisement---

அமராவதி திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அஜித். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் நுழைந்தவர். சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது. விஸ்வாசம், வேதாளம், துணிவு என மெகா ஹிட் படங்களை கொடுத்து விஜய்க்கு டஃப் கொடுத்து வருகிறார்.

Ajith
Ajith

திரையுலகில் பல அவமானங்களை சந்தித்தவர் அஜித். அதனால்தான் இப்போது பெரிய நடிகரான பின் எந்த சினிமா விழாக்களிலும் அவர் கலந்து கொள்வது இல்லை. அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொள்வதில்லை. எந்த பேட்டியும் கொடுப்பதில்லை. செய்தியாளர்களையும் சந்திப்பது இல்லை. ஒன்று படப்பிடிப்பில் இருப்பார். இல்லையேல் வீட்டில் இருப்பார். இரண்டு இல்லையேல் பைக்கை எடுத்துக்கொண்டு எங்கேயாவது சென்றுவிடுவார். சமீபத்தில் கூட பைக் மூலம் நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளில் பயணம் செய்தார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். மேலும், திரிஷா மற்றும் அனுஷ்கா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஒருநாள் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருந்தார். கேரவானில் இருந்து அவர் வெளியே வந்த போது நடிகர் கே.எஸ்.ஜி. வெங்கடேஷ் ஒரு காட்சியில் நடிப்பதற்காக அங்கே அமர்ந்திருப்பதை பார்த்துள்ளார்.

ksg venkatesh

அஜித்துக்கும், அவருக்கும் சில வருடங்களுக்கு முன்பே ஏதோ ஒரு விஷயத்தில் மனக்கசப்பு இருந்துள்ளது. எனவே, அவரை பார்த்ததும் அஜித்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வெளிக்காட்டி கொள்ளாமல் அவரை நலம் விசாரித்துவிட்டு, கவுதம் மேனனிடம் ‘நான் கேரவான் போயிட்டு வரேன்’ என சொல்லிவிட்டு போனவர் திரும்பிவரவே இல்லையாம். அப்படியே அவர் வீட்டிற்கு சென்றுவிட்டது அப்புறம்தான் படக்குழுவினருக்கே தெரியவந்துள்ளது.

அஜித் நடிக்கும் படங்களில் அவருக்கு தெரியாமல் ஒரு நடிகர் உள்ளே வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.