அஜித் செய்த வேலை!.. கடுப்பான பிரேமலதா!. வராம போனதுக்கு இதுதான் காரணமாம்!..

Published on: January 8, 2024
ajith
---Advertisement---

Vijayakanth:விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் இதுவரை ஏன் செல்லவில்லை என்கிற கேள்வி ரசிகர்கள் பலருக்கும் இருக்கிறது. அஜித் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்தார் விஜயகாந்த். சங்கத்தின் கடனை அடைப்பதற்காக சிங்கப்பூர், மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்தினார்.

அதற்கும் அஜித் செல்லவில்லை. தன் உடம்பில் நிறைய ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதாக விஜயகாந்திடமே சொல்லி எஸ்கேப் ஆனார். ஆனால், விஜயகாந்த் மரணமடைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்த அஜித் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போகவில்லை. அவரின் போட்டி நடிகராக பார்க்கப்படும் விஜய் அவ்வளவு கூட்டத்தில் தட்டு தடுமாறி வந்து, சட்டையெல்லாம் கிழிந்துபோய் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு போனார். விஜயகாந்த் ரசிகர்கள் சிலர் அவர் மீது செருப்பையும் வீசினர்.

இதையும் படிங்க: பயில்வான் காலில் விழுந்த இசைஞானி இளையராஜா!… அதை செய்ய வைத்த பிரபலம்!.

ஆனால், அஜித் இப்போதுவரை வரவில்லை. அதேபோல், கலைஞர் 100 விழாவிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. அவரை பார்க்க பல ரசிகர்கள் அங்கே வந்திருந்தனர். ஆனாலும் அங்கேயும் அவர் போகவில்லை. பொதுவாக அஜித் எப்போதும் எல்லோரிடமிருந்தும் விலகியே இருப்பார். ஒரு இயக்குனரை முடிவு செய்வார். அதன்பின் தயாரிப்பாளரை முடிவு செய்தார். அந்த தயாரிப்பாளரை நேரில் கூட சென்று பார்க்கமாட்டார்.

படப்பிடிப்பில் கலந்துகொள்வார். படம் முடிந்ததும் அடுத்த படம். இப்படித்தான் போகிறது அவரின் வாழ்க்கை. இடையில் பைக்கை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு போய்விடுவார். சில மாதங்கள் கழித்து வந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். அஜித்தை அதிக பட்சம் விமான நிலையத்தில் பார்க்கலாம். அவ்வளவுதான்.

இதையும் படிங்க: ரஜினியின் பொன்விழா ஆண்டில் மகுடம் சூட்டப்போகும் லோகேஷ்! நடத்தப் போறது யார் தெரியுமா?

விஜயகாந்த் விஷயத்தில் இப்போது புது தகவல் கசிந்திருக்கிறது. விஜயகாந்தின் வீட்டுக்கு செல்ல அதிகாலை 3 மணிக்கு வரட்டுமா என பிரேமலதா தரப்பிடம் அனுமதி கேட்டிருக்கிறார் அஜித். 3 மணியா என அதிர்ச்சியாகிவிட்டு ‘சொல்கிறோம்’ என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்கள். அதன்பின் அஜித்துக்கு எந்த தகவலையும் பிரேமலதா தரப்பு சொல்லவில்லை.

எனவேதான், அஜித் விஜயகாந்தின் வீட்டுக்கு இதுவரை செல்லவில்லை என சொல்லப்படுகிறது. அதிகாலை 3 மணிக்கு சென்றால் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள் என யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, தொல்லை இல்லாமல் போகலாம் என அஜித் நினைக்கிறாராம். அவர் வாழ்வில் அடுத்தடுத்த நிலைக்கு போன இவர்கள் எல்லாமே தேவைப்பட்டார்கள். ஆனால், இப்போது யாருமே தேவையில்லை என்கிற மனநிலையில் இருக்கிறார். என்னத்த சொல்ல!..

இதையும் படிங்க: வடிவேல் ஏழரையை இழுத்த 5 பெரிய நடிகர்கள்!.. கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.