அமராவதி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஜித். தொடர்ந்து சாக்லேட் பாயாக பல படங்களிலும் நடித்து வந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறினார். தீனா, பில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்கள் அவருக்கு நிறைய ரசிகர்களை பெற்று தந்தது.
பல வருடங்களாகவே விஜய்க்கு போட்டியாக அஜித் இருந்து வருகிறார். விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக அஜித் இருக்கிறார். அதனால்தான் சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் தொடர்ந்து மோதி வருகிறார்கள்.
சினிமாவில் நடிப்பது போக பைக் ரேஸ், கார் ரேஸ், பைக் நீண்ட தூரம் பயணிப்பது, துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொள்வது என அஜித்துக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. இப்படி பல விஷயங்களில் ஆர்வம் இருந்தாலும் சினிமா என்று வந்துவிட்டால் அஜித் சின்சியராக இருப்பார். அதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கிறார்.
தீனா படம் முடிந்தபோது அஜித் பைக் ரேஸில் கலந்து அவருக்கு விபத்து ஏற்பட்டு அவரின் முதுகில் அடிபட்டிருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிடவே அஜித் ஆம்புலன்சில் வந்து அந்த படத்திற்காக டப்பிங் பேசி கொடுத்தார். அவ்வளவு சின்சியரானவர்தான் அஜித்’ என்று பேசியிருக்கிறார்.
அஜித் இப்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். அடுத்து இவர் நடிக்கவுள்ள புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அஜித்துக்கு 185 கோடி சம்பளம், மொத்த பட்ஜெட் 300 கோடி என்பதால் தயாரிப்பாளர் யார் என இதுவரை முடிவாகாமல் இருக்கிறது.
