வேண்டுமென்றே மனைவி ஷாலினியிடம் தோற்கும் அஜித்... அட இதலயும் இவர் அப்படித்தானா?!..

by சிவா |   ( Updated:2022-12-09 07:36:40  )
ajith
X

ajith

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அமராவதி படத்தில் அறிமுகமாகி சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்து காதல் மன்னனாக மாறி தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக உயர்ந்துள்ளார். இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவரின் படங்கள் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள பக்கா ஆக்‌ஷன் படமான துணிவு வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், நடிகர் அஜித் ஈகோ இல்லாதவர், மிகவும் எளிமையானவர், தெரியாமல் பலருக்கும் பல உதவிகளை செய்பவர், டீசண்ட் ஜெண்டில்மேன் என பல பெயர்கள் அவருக்கு திரையுலகில் உண்டு. ஆனால், திரையுலகில் மட்டுமில்லை வீட்டிலும் அப்படித்தானாம்.

ajith

அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும். ஷாலினியை புரபோஷ் செய்து பல முயற்சிகளை செய்து ஷாலினியின் மனதை கரைத்துதான் அஜித் அவரை சம்மதிக்க வைத்தார். தற்போது ஷாலினிக்கு ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் அஜித் கொடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான திருமண வாழ்வை இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

shalini

ஷாலினுக்கு ஷட்டில் காரக் எனப்படும் இறகுப்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் உண்டு. தினமும் அந்த விளையாட்டை அவர் விளையாடுவார். இது தொடர்பான சில போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார். மனைவி ஷாலினிக்காக வீட்டிலேயே ஷட்டில் கோர்ட் கட்டிக்கொடுத்துள்ளார் அஜித்.

shalini

ஷாலினியுடன் வீட்டில் விளையாடும்போது அஜித் சீரியஸாகவே விளையாட மாட்டாராம். அஜித்தான் வெற்றி பெறுவார் என நண்பர்கள் பெட் கட்டினாலும் மனைவி ஷாலினிகாக விட்டுக்கொடுத்து தோற்றுவிடுவாராம். சீரியஸாக விளையாடுங்கள் என ஷாலினி கூறினாலும், நான் சீரியஸாகத்தான் விளையாடினேன். நீ சிறப்பாக விளையாடி என்னை ஜெயித்துவிட்டாய்’ என சொல்வாராம் அஜித்.

அட தல வீட்டிலயும் இப்படித்தானா!..

இதையும் படிங்க: நாம வளர்த்துவிட்ட பையன்!..ஹீரோக்களின் இமேஜ் புரியாமல் தப்பு பண்ணும் இயக்குனர்கள்…

Next Story