அஜித் இப்படி மாறினதுக்கு அந்த சம்பவம்தான் காரணம்!... அவரே சொன்ன வீடியோ.....

by சிவா |   ( Updated:2021-10-01 21:55:44  )
actor ajith
X

நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ajith-6

Ajith

அஜித் நடிகர் என்பதை தாண்டி அன்பாக பேசுபவர், பண்பாக நடந்து கொள்வார், படப்பிடிப்பில் சாதாரண தொழிலாளிகளிடம் கூட சிரித்து பேசிக்கொண்டிருப்பார், எல்லோரையும் மரியாதையாக நடத்துவார், படப்பிடிப்பில் நுழைந்ததும் அங்கிருக்கும் அனைவருக்கும் ஒரு புன்னகையுடன் கை கொடுத்துவிட்டு வணக்கம் சொல்வார், அவரை போன்ற நடிகர் யாரும் கிடையாது என பொதுவாக திரையுலகில் கூறுவதுண்டு.தற்போது அஜித் ஏன் அப்படி மாறினார் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தளபதி 66 படத்தில் ஹீரோயின் அவர்தான்!.. வாய்ப்பு கிடைச்சது இப்படித்தானாம்!….

சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் அவரே இதை கூறியுள்ளார். அவரை பற்றி பேசும் இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித் உள்ளே நுழைந்ததும் எல்லோருக்கும் புன்னகையுடன் கை கொடுத்து வணக்கம் சொல்வார். இதுவே அவர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் எனக்கூறுகிறார்.

ajith5

அதை தொடர்ந்து பேசும் அஜித் ‘நான் சினிமாவுக்கு வருவதற்கு முன் சில நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன். அப்போது, அங்கு பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் தங்களை உயர் அதிகாரிகள் நடத்தும் விதத்தை பார்த்துள்ளேன்.

இதையும் படிங்க: வட போச்சே!… பல கோடி பட்ஜெட்… ரஜினி பட வாய்ப்பை இழந்த இளம் இயக்குனர்…

ஒருவன் பணம், காசு, புகழ் ஆகியவற்றை விட முதலில் தன்னை ஒரு மனிதராக மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புவான். உயர் அதிகாரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, வாழ்த்தாமல் சென்றுவிட்டார் எனப் பேசுவதை பார்த்துள்ளேன். அப்போதுதான் நாம் ஒரு இடத்திற்கு சென்றால் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்’ என அஜித் பேசியுள்ளார்.

https://twitter.com/trolee_/status/1443957948967895041

Next Story