தோனியை புகழ்ந்து வசமாக சிக்கிய தனுஷ்.. வச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2021-10-16 10:19:28  )
trending
X

ஐபில் 20-20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கொல்கத்தா அணி மோதியது.

இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 4வது முறையாக ஐபில் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.

danush

எனவே, சமூகவலைத்தளங்களில் பலரும் தோனியை பாராட்டி கருத்து தெரிவித்தனர். நடிகர் தனுஷ் தெரிவித்துள்ள கருத்தில் ‘ஷேன் வாட்ஸன் காலில் ரத்தத்தோடு விளையாடியது ஞாபகத்துக்கு வருகிறது. ஜக்ஜ்வாட்,உத்தப்பா, ஜடேஜா மற்றும் இறுதியாக ஒன் அண்ட் ஒன்லி ஒன் எங்க தல தோனி’ என பதிவிட்டிருந்தார்.

தலன்னா ஒருத்தர்தான் அது தோனிதான் என தனுஷ் குறிப்பிட்டது அஜித் ரசிகரக்ளுக்கு கோபத்தை ஏற்படுத்த அவரை திட்ட துவங்கிவிட்டனர். டிவிட்டரில் #நன்றிகெட்டஎழும்பன்_தனுஷ்’ என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்ய துவங்கி விட்டனர்.

Next Story