அந்த விஷயத்துல அஜித்தை கெடுத்தது ரஜினிதான்!...அட இது தெரியாம போச்சே!...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். ரஜினி, விஜய்க்கு பின்னர் இவருக்குதான் ரசிகர் பட்டாளம் அதிகம். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜித் கடந்த சில வருடங்களாகவே எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான விழாக்களுக்கும் அவர் வருவதில்லை. அரிதாகத்தான் அவரை பொதுவெளியில் பார்க்க முடியும். அதுவும், ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக்கில் எங்காவது ஊர் சுற்றுவார்.. அல்லது துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு செல்வார்.
தொடக்கம் முதலே அஜித் இப்படி கிடையாது. சினிமா விழாக்களில் கலந்து கொள்வார். அவர் நடித்த படங்கள் தொடர்பான புரமோஷன்களில் கலந்து கொள்வார். ஆனால், கடந்த சில வருடங்களாக இதை அவர் பின்பற்றுவதில்லை.
இந்நிலையில், இதற்கு பின்னணியில் ரஜினி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும். அஜித்துக்கும் ரஜினி மீது பெரிய மரியாதை உண்டு. ஒரு முறை இருவரும் சந்தித்த போது ‘நீ செய்தியாளர்களை சந்திக்காதே.. பட விழாக்களுக்கும் செல்லாதே.. உன் படம் தொடரபான் புரமோஷன்களுக்கு செல்லாதே.. நீ வேற உலகத்திற்கு செல்... அப்போதுதான் உன்னை மதிப்பார்கள்’ எனக் கூறினாராம். இதைக்கேட்டுத்தான் அஜித் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ரஜினியின் அறிவுரை மட்டுமில்லாமல் திரைத்துறையில் அஜித் சந்தித்த கசப்பான அனுபவங்களின் பின்னணியும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
வலிமை படத்தின் புரமோஷன் விழா கேரளா, கர்நாடகா, மும்பை ஆகியவற்றில் நேற்று நடந்தது. ஆனால், இது எதிலும் அஜித் கலந்து கொள்ளவில்லை குறிப்பிடத்தக்கது.