தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். மாஸ் நடிகராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறக்கும் அஜித்தின் படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரும் பொங்கல் அன்று அஜித்தின் துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகின்றன.
எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, அமீர்,பாவ்னி, மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திற்கு துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
துணிவு படத்தின் தமிழ் நாட்டு தியேட்டர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதுவே துணிவு படத்திற்கு கூடுதல் சிறப்பு என படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. மேலும் இன்னும் படத்தில் ஒரு பாடலே படமாக்க வேண்டியிருப்பதால் அந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு என்ன முடிவு செய்யப்போகிறது என்று ரசிகர்களில் இருந்து பிரபலங்கள் வரை அனைவரும் காத்திருந்தனர். ஏனெனில் எந்த ஒரு வெளிவிழா, பிரஸ் மீட் என எதிலும் கலந்து கொள்ளாத அஜித் எப்படி புரோமோஷனில் கலந்து கொள்ளப்போகிறார் என்று அனைவரும் ஆச்சரியம் கலந்த பிரமிப்பில் இருந்தனர்.
அந்த சமயத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு ட்விட்டை பதிவிட்டார். அதாவது ‘ஒரு நல்ல படமே அந்த படத்திற்கு புரோமோஷனாகும்’ என்று பதிவிட்டிருந்தார். அஜித் என்ன நினைக்கிறாரோ அதை அவரின் மேலாளர் மூலமாக தெரிவித்துவிடுவார் அஜித். அதன் மூலம் இந்த பதிவிலிருந்து அஜித் புரோமோஷனுக்கு வரமாட்டார் என்று தெரிய வந்தது.
இதையும் படிங்க: படத்துக்குப் படம் வித்தியாசம் செய்யும் யுக்தியைக் கையாளும் தீராத் தாகம் கொண்ட உன்னதக் கலைஞன் இவர் தான்..!
இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இந்த சூழலில் இணையத்தில் வாரத்திற்கு ஒருமுறையாவது அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அவுட்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள், துணிவு படத்தின் போஸ்டர்கள் என எதாவது இணையத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் இது நாள் வரை எந்த ஒரு சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்திராத ஷாலினி திடீரென இன்ஸ்டாவில் புதிய கணக்கை தொடங்கியிருப்பது துணிவு படத்திற்கான புரோமோஷனுக்காக கூaட இருக்கலாம் என சில தகவல்கள் கூறுகின்றன.
மேலும் நேரில் புரோமோஷனுக்கு கலந்து கொள்ள விருப்பமில்லாத அஜித் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் இணையம் வழியாக புரோமோஷனுக்கான வேலைகளில் இறங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் அஜித் ரௌடிகளிடம் சிக்கி கெத்தா உட்கார்ந்திருக்கும் மாதிரியான போஸில் ஸ்டில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து அஜித்தின் புரோமோஷன் ஐடியா இது தான் போல என தெரிகிறது. போஸ்டரை வெளியிட்டு புரோமோஷனை முடித்துக் கொள்ள பார்க்கிறார் அஜித் என சில கமெண்ட்களும் வருகின்றன.
தனுஷ் முதன்…
விஜய் தமிழக…
தற்போது சமூக…
அண்ணா யாரு…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்…