ரசிகர்களால் அடைந்த டார்ச்சர்!.. அடுத்த அரைமணி நேரத்தில் அஜித் எடுத்த முடிவு!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிவடைந்த நிலையில் ஒரு பாடல் காட்சியை மட்டும் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறார்கள்.
துணிவு படம் வருகிற பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. இதில் பெரும் எதிர்பார்ப்பு படம் எப்படி இருக்குமோ அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. துணிவு படத்தோடு வாரிசு படம் மோதுவதால் உலகப்போரை எதிர்பார்த்து இருக்கும் சூழ்நிலைதான் நிலவுகின்றது.
போட்டா போட்டி
விஜய் அஜித் இவர்களுக்குள் போட்டிகள் பொறாமைகள் இருக்கிறதோ இல்லையோ இது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இந்த ரிலீஸ் பிரச்சினையை பெரிதாக்கி காட்டப்போகிறவர்கள் ரசிகர்கள் தான். அந்த அளவுக்கு தன் தலைவன் மீது அலாதி பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : பிரசாந்தின் இந்த ஹிட் படம் விஜய் செய்ய வேண்டியது… இந்த காரணத்தால் தான் மிஸ் ஆகிட்டு… சீக்ரெட் சொன்ன இயக்குனர்…
அதிலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ரசிகர் மன்றத்தை கலைத்த பின்பும் தனக்கு பிடித்த நடிகருக்காக இன்னமும் உயிரைக் கொடுக்க துணிந்த ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது அஜித்திற்கு மட்டும் தான். ரசிகர்களால் லாபமும் உண்டு , விபரீதமும் உண்டு.
ரசிகர்களின் தொல்லை
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சமீபத்தில் நடந்த விஜய் ரசிகர்களால் பத்திரிக்கையாளருக்கு நடந்த பிரச்சினை தான். சும்மாவே பத்திரிக்கை நண்பர்களை எந்த விதத்திலும் பகைக்க கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் அது தன் ரசிகர்கள் மூலமாகவே நடந்திருக்கு என்று அறியும் போது செம காண்டாகியிருக்கிறார்.
இதனால் தான் அஜித் தன் ரசிகர் மன்றத்தையே கலைத்திருக்கிறார். ஆனாலும் மன்றத்தை கலைப்பது என்றால் ஒரு தனி துணிவு வேண்டும் அது உண்மையிலேயே அஜித்திற்கு இருக்கிறது என்று இந்த தகவலை தெரித்த வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
அஜித் ரசிகர்கள் செய்த காரியம்
அதாவது ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம், கட் அவுட் இதையெல்லாம் வைத்துக் கொண்டாடினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டப்பஞ்சாயத்து வரை சென்று போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறார்களாம். இன்னும் ஒரு படி மேல் போய் ரசிகர்கள் அஜித் வீட்டின் முன்பு நின்று கண்டிப்பாக அஜித்தை பார்த்தே ஆகவேண்டும் என கத்தி கூச்சலிட்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : பூர்ணிமாவை கண்டுக்காமல் போன பாக்யராஜ்.. ‘இவ்வளவு கர்வமா இவருக்கு”… ஆனால் உண்மையான காரணம் தெரிஞ்சா சிரிச்சிடுவீங்க…
இதனால் கடுங்கோபத்தில் வெளியே வந்த அஜித் ரசிகர்களுக்கு அஜித்திற்கும் பெரிய வாக்குவாதமே வந்ததாம். அதன் பின் கோபமாக வீட்டிற்குள் போன அஜித் கதவை சாத்திய பிறகு அடுத்த அரைமணி நேரத்தில் தான் இனி ரசிகர் மன்றம் இயங்காது . மன்றத்தை கலைக்கிறேன் என்று முடிவெடித்திருக்கிறார். இதை வலைபேச்சு அந்தனன் கூறினார்.