Connect with us
ajit

Cinema News

‘தல’ னு கூப்பிட வேணானு சொன்னாரு! ஆனால் இப்போ அஜித்குமாரும் இல்லையாம் – என்ன பேர் தெரியுமா?

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் அஜித்துக்கு அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் பெயர் இருந்து வந்தது. ஆனால் அஜித் அந்த இரண்டு அடைமொழிகளால் என்னை அழைக்க வேண்டாம் என்று வெளிப்படையாக அறிக்கை விடுத்தார்.

அஜித்குமார் என்றோ அல்லது ஏகே என்றோ கூப்பிட்டால் போதும் என்றும் சொல்லியிருந்தார். அதிலிருந்தே அவர் நடிக்கும் சமீபகால படங்களில் வெறும் அஜித்குமார்  என்றே டைட்டில் கார்டில் போடப்பட்டு வருகிறது. கோலிவுட்டிலேயே அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் அஜித் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: என்னது இளைய தளபதி சிவகார்த்திகேயனா? கொஞ்சம் கூட ஒட்டலயே – எல்லாம் ‘அயலான்’ கையிலதான் இருக்கு

அவரை காண்பதே ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. பொதுஇடங்களிலோ அல்லது விழாக்களிலோ அஜித்தை எங்கும் பார்க்க முடியவில்லை. அவரின் புதிய படம் ரிலீஸுக்கு வரும் போதுதான் சரி அஜித் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் அந்த குறையை இப்போது போக்கி வருகிறார். அவ்வப்போது அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தை அலங்கரித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் விமான நிலையத்திற்கு போனால் கண்டிப்பாக அஜித்தை பார்க்கலாம் என்ற வகையில்தான் அஜித்தை பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. அதனாலேயே ரசிகர்கள் அவரை ‘ஏர்போர்ட் குமார்’என அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!..

எந்தளவுக்கு ட்ரோல் செய்ய வேண்டுமோ அதை விட அதிகமாகவே ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது துருக்கியில் அஜித் இருப்பதாகவும் அங்கு முக்கிய பிரபலங்களுடன் அஜித் இருக்கும் புகைப்படம்தான் இப்போது வைரலாகி வருகின்றது.

அதை பார்க்கும் ரசிகர்கள் இங்கு தமிழ் மக்களிடம் காசு வாங்கிட்டு அங்கு ஜாலியாக இருக்கிறீர்களா? என்றும் தன் மரியாதையை தானே கெடுத்துக்கூடிய ஒரே தலைவன் நீ தான் தல என்றும் விஜயகாந்த் இறப்பிற்கு கூட இன்னும் வந்து அஞ்சலி செலுத்த வரவில்லை என்றும் திட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: 10 நொடி விளம்பரத்திற்கு 4.50 லட்சமா? நடிக்க மறுத்த ‘விக்ரம்’ பட புண்ணியவான்ஸ் – ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவிங்க

google news
Continue Reading

More in Cinema News

To Top