அஜித்துக்கு அப்படி உதவினேன்!.. ஆனா கை விட்டு விட்டார்!.. போண்டா மணி உருக்கம்…

Published on: March 20, 2023
bonda
---Advertisement---

திரையுலைகில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் போண்டாமணி. இவரின் பெயர் மணி. இலங்கை தமிழர். இலங்கையிலிருந்து அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் பல வருடங்களாக போராடி ஒரு இடத்தை பிடித்தவர்.

படப்பிடிப்பில் போண்டாவை மணி விரும்பி சாப்பிடுவார் என்பதால் இவரை போண்டா மணி என பலரும் அழைக்க அதுவே அவரின் பெயராகவும் மாறியது. நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இவர் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், திரையுலகம் தனது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வீடியோக்கள் மூலம் கோரிக்கையும் வைத்தார்.

bonda
bonda

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த போண்டா மணி ‘நான் உடல் நிலை பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டே விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோர் எனக்கு உதவி செய்தனர். அது நான் எதிர்பார்க்காதது. மேலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். இது முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கும் தெரியும். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியத்தை அனுப்பி எனக்கு நல்ல சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

அதேபோல், ரஜினி சாருக்கும் தகவல் அனுப்பினேன். உடனே என்னை செல்போனில் அழைத்து பேசி ‘நான் இருக்கிறேன்’ என நம்பிக்கை கொடுத்தார். சிகிச்சைக்கு பின் குடும்பத்தோடு வீட்டுக்கு வாருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார். வடிவேலு எந்த உதவியும் செய்யவில்லை. அவர் ரீ எண்ட்ரி கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் என்னை நடிக்க அழைக்கவில்லை. தேடிச்சென்ற போது பார்க்கமலேயே திருப்பி அனுப்பினார்.

bonda
bonda

அஜித்துக்கு துவக்கத்தில் நான் உதவிகள் செய்துள்ளேன். அஜித் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது நான் இயக்குனர் வி.சி.குகநாதன் அலுவலகத்தில் இருப்பேன். அங்கும் வந்து அஜித் வாய்ப்பு கேட்டார். குகநாதன் இயக்கத்தில் ரஞ்சித் நடித்து பாதியில் நின்ற திரைப்படம் ‘மைனர் மாப்பிள்ளை’. எனவே, இன்னொரு ஹீரோவையும் அந்த படத்தில் போட்டு எடுக்க குகநாதன் முடிவு செய்தார். அப்போது அஜித் பெயரை நான்தான் பரிந்துரை செய்தேன். அப்படித்தான் அப்படத்தில் நடித்தார் அஜித். அந்த படத்தில் அவருடன் நானும் நடித்தேன்.

minor
minor

அதனால் என்னிடம் எப்போதும் விஸ்வாசமாக இருப்பார் அஜித். ஆனால், அவர் படிப்படியாக வளரும் போது எனக்கு அவர் வாய்ப்புகள் வாங்கி கொடுக்கவில்லை. அதுகூட பரவாயில்லை. எனக்கு உதவும்படி அவரின் மேனேஜர் மூலம் தகவல் சொன்னேன். ஆனால், அவர் தரப்பிலிருந்து எனக்கு உதவியும் கிடைக்கவில்லை. சினிமா அப்படித்தான். எல்லோரும் நன்றியுடன் இருக்க மாட்டார்கள்’. மேலும், ரசிகர்கள் மூலம்தான் நடிகர்கள் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களை சந்திக்காமல் அஜித் இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை’ என போண்டா மணி பேசியுள்ளார்.

பொதுவாக அஜித் இரக்க சுபாவம் உள்ளவர்தான். பலருக்கும் நிறைய உதவிகளை அவர் சத்தமில்லாமல் செய்துள்ளார். ஆனால், போண்டா மணி விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: ஒரு நிமிஷத்துக்கு 5 லட்சம்!.. மணமகனிடம் ரகசிய டீல் பேசிய ஹன்சிகாவின் தாய்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.