‘விடாமுயற்சி’க்கு குட்பை! புது முயற்சியை கையில் எடுத்திருக்கும் அஜித் - அட இதுகூட நல்லா இருக்கே
நடிகர் அஜித் இப்போது தொடர்ந்து தனது பைக் பயணத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நடிப்பில் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விடா முயற்சி. துணிவு படத்தின் மிகப்பெரிய வெற்றி அடுத்த படத்தில் அஜித் எந்த மாதிரியான ஒரு பர்பாமென்ஸ் தர போகிறார் என்பதை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் யார் கண் பட்டதோ விடாமுயற்சி படத்தை பற்றி பேச்சு எழுந்ததிலிருந்து பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் வந்தன. இன்று வரைக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றன. இதற்கிடையில் விடாமுயற்சிக்கான ஸ்கிரிப்ட் தயாராகி இருப்பதாகவும் அந்தப் படத்தில் அஜித் தன்னுடைய வெயிட்டை குறைப்பதற்காக முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு பக்கம் பேச்சு அடிபட்டு கொண்டு வருகின்றது.
மே ,ஜூன் ,ஜூலை என்று படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே இப்போது ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகின்றன. கிட்டத்தட்ட ஐந்து மாத காலமாகியும் தள்ளிக் கொண்டே தான் போகின்றது. இந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.
அதாவது சில தினங்களுக்கு முன்பு தனது உலக பைக் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட அஜித் அந்த சமயத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இருந்தார். பைக் ஓட்டும்போது ஹெல்மெட் ,கைகடிகாரம், பைக் போன்றவைகளில் கேமராவை செட் பண்ணி இருந்தாராம். அதாவது எங்கெல்லாம் போகிறாரோ எப்படி எல்லாம் ஓட்டுகிறாரோ அதை அப்படியே படம் பிடித்து வீடியோவாக ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறாராம் அஜித்.
இதையும் படிங்க : நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டா அங்க போயும் பிரச்சனையா?!. அடங்காத மாரிமுத்து!..
தனியாக ஒரு அலுவலகம் அமைத்து அங்கு ஒரு எடிட்டரையும் உட்கார வைத்து அந்த சுற்றுப்பயணம் மேற்கண்ட போது எடுத்த வீடியோக்களை தனியாக எடிட் செய்ய சொல்லி இருக்கிறாராம் .அது மட்டும் இல்லாமல் இந்த வீடியோவை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியே போய் விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம். அதனால் அந்த அறைக்கு அந்த எடிட்டரை தவிர வேறு யாரையும் அனுமதிக்காத வகையில் ஃபிங்கர் பிரிண்ட் அக்சஸும் வைத்திருக்கிறாராம்.
ஒருவேளை இந்த வீடியோவை எல்லாம் நெட்ஃபிளிக்ஸுக்கு விற்கப் போகிறாரோ என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகின்றனர் .ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? இப்படி எல்லாம் செய்யும் அஜீத் பின்னணியில் ஒரு காரணம் இல்லாமல் இதை செய்ய மாட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.