கண்ட நாயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண தேவை இல்ல! – தயாரிப்பாளரையே திட்டிய அஜித்…

Published on: May 1, 2023
---Advertisement---

கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நட்சத்திரங்களில் நடிகர் அஜித்குமாரும் முக்கியமானவர். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே அதிக சம்பளத்தை பெற்று வருகிறார் அஜித்.

அஜித் நடித்து கடந்த பொங்கலன்று வெளியான துணிவு திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அஜித்தின் 62 வது படம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வராமல் இருந்தது. இந்த நிலையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்து அதன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அஜித் தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர் அதை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் முந்தைய கால வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் பத்திரிக்கையாளர் அந்தணன்.

கோபமான அஜித்:

சினிமாவில் ஒருமுறை அதிக விமர்சனத்துக்கு உள்ளானார் நடிகர் அஜித். இதனால் அவரது பட வாய்ப்புகளும் குறைந்து போனது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. அந்த சமயத்தில் தமிழ் திரைத்துறை அஜித்தை கைவிட்டது என கூறலாம். அஜித்திற்கு உதவி செய்ய யாருமே அப்போது வரவில்லை. இதனால் சினிமா துறையின் மீது பெரும் கோபத்திற்கு ஆளானார் அஜித்.

அதன் பிறகு தமிழின் பெரும் தயாரிப்பாளரான கோதண்ட ராமய்யா அஜித்திடம் பேசினார். அப்போது அஜித்திற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் கோதண்ட ராமய்யா. இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் இதுக்குறித்து அஜித் பேசும்போது கண்ட நாயும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் என நேரடியாகவே கூறினார்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் மீது வெறுப்பில் இருந்தார் அஜித் என கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் அந்தணன்.

இதையும் படிங்க: 90’ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய விக்ரமன் படத்தின் இரண்டாம் பாகம்… இதுலயும் 5 நிமிஷத்துல கலெக்டர் ஆகிடுவாங்களோ?

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.