மகனின் பிறந்தநாள் விழா...வேற மாதிரி லுக்கில் அஜித்... தீயாய் பரவும் புகைப்படங்கள்...

by சிவா |   ( Updated:2022-03-03 02:43:06  )
ajith
X

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய வலிமை திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வரும் நிலையில், தனது 61வது படத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.

இப்படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு நெகட்டிவ் சேட் இருப்பது போன்ற கதாபாத்திரம் என வினோத் ஏற்கனவே தெரிவித்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ajith

இப்படத்திற்கு அஜித் ஒரு புது கெட்டப்புக்கு மாறியுள்ளார். நரைத்த தலைமுடி, மீசை, நீண்ட தாடி என அவரின் தோற்றம் வேறு மாதிரி இருக்கிறது. காதில் கடுக்கணும் அணிந்துள்ளார்.

ajith

இந்நிலையில், நேற்று அஜித் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் மனைவி,மகன், மகள் ஆகியோரிடம் அஜித் அமர்ந்திருக்கும் புகைப்படமும், ஷாலினியின் கன்னத்தோடு கன்னம் வைத்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ajith

Next Story