நேருக்கு நேர் படத்தில் முதலில் நடித்த பிரபலம்..! அஜீத் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் படம் பண்ணாததற்கு இதுதான் காரணமா...!
1997ல் வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படத்துல முதலில் விஜயும், அஜீத்தும் தான் நடித்தனர். அதன்பிறகு வந்த சில பிரச்சனைகளால அஜீத் விலக நேர்ந்தது. அவருக்குப் பதில் சூர்யா நடித்தார்.
ரஜினி, கமலுக்குப் பிறகு கடும்போட்டி நடப்பது அஜீத் விஜய்க்குத் தான். தற்போது கூட வர இருக்கும் பொங்கலுக்கு அஜீத்தின் துணிவு படமும், விஜயின் வாரிசு படமும் மோதுகிறது.
இருவருடைய ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தலைவரின் படங்களுக்கும், கட் அவுட்களுக்கும் பாலாபிஷேகம் பண்ணி திரையரங்கைத் திருவிழாவாக மாற்றுவர். ஆனால் அஜீத், விஜய் இடையேயான போட்டி நிஜவாழ்க்கையில் உண்டா என்பதற்கு அஜீத் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
எந்த ஒரு ஃபீல்டா இருந்தாலும் போட்டி இருக்கும். பொறாமை இருக்கும். ஆனால் பர்சனல் லைஃப்ல யாரையும் பாதிக்காம இருக்குற அளவுக்கு இருந்தா அது ஆரோக்கியமான விஷயம்.
எப்படி உங்களுக்குள்ள போட்டி இருக்குமோ அதே போல எங்களுக்குள்ளும் இருக்குது. ஆனா பர்சனல் லைஃப்ல இல்ல. டெபனைட்டா நாங்க எதிரிகள் கிடையாது.
மல்டி ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் பண்ணுவீங்களான்னு கேட்டாங்க. ஐ யம் நாட் கம்பார்டபிள். அதுக்கு என்ன காரணம்னா இன்னிக்கு ஒரு படம் சூட்டிங் நடக்குதுன்னா 1500 குடும்பங்களுக்கு வேலை கிடைக்குது.
விஜய்யை வச்சி படம் பண்றப்போ 1500 குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும். அதே போல நான், விக்ரம், சூர்யா படங்கள்லயும் இந்த மாதிரியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ரெண்டு ஹீரோக்கள் பண்றப்ப வேலைவாய்ப்புகள் குறையும்.
அதுக்கு அவசியமே கிடையாது. ஆனா இன்னிக்கு நாங்க எல்லாரும் தனித்தனியான மார்க்கெட்டோடு இருக்குறோம். கதை அமையணும்...ஒரு ஷோலே மாதிரியோ இல்ல...ரஜினி சார்...கமல் சார் நடிச்ச மாதிரி ஹிட் படமாகவோ...இருக்கலாம்.
2 ஹீரோக்கள் படங்களில் நல்ல கதை அமைஞ்சாலும் சாங்ஸ் ஹிட்டாகணும். ஒன் ஆர் டூ சாங்க்ஸ் தான் ஹிட்டாகும். அதுல யாராவது ஒரு ஹீரோக்குத் தான் ஹிட்டாகும்.
இப்படி வர்றப்ப ரசிகர்கள் மத்தியில தேவையில்லாத அரசியல், அதிருப்தின்னு எல்லாம் வரும். டைரக்டருக்கும் தேவையில்லாத பிரச்சனை. இப்ப இருக்குற சூழல்ல இந்தப் பிரச்சனை தேவையில்ல.
ஆனா பண்ணியிருக்கோம்...நேருக்கு நேர் படம் ஒண்ணா நடிச்சோம்...பட் ப்ராப்ளம்ஸ்...அதைக் கம்ப்ளீட் பண்ண முடியலன்னாங்க. நிறைய டிபரண்ட் ஜானர்ஸ்ல நாங்க நடிச்சிருக்கோம். பில்லா 46வது படம். குறிப்பிட்டு எனக்கு சொல்லத் தெரியல.
ஆனா நிறைய சேலஞ்சிங்கான படங்கள் பண்ணிருக்கேன். எனக்குப் பிடிச்ச படம்னா வாலி, வரலாறு, முகவரி, கிரீடம்னு சொல்லிக்கிட்டே போகலாம். இடையில வந்து ஒரு சில படங்கள் வெற்றி அடையாம போயிடுச்சு. ஆனா அது எல்லாருக்கும் வரத் தான் செய்யும்.
1995ல் அஜீத், விஜய் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இருவரும் இணைந்து நடித்த முதலும் கடைசியுமான படம் ஆயிற்று.