சினிமாவில் நடிப்பதை நிறுத்த போகிறேன்!.. இயக்குனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்...
தமிழ் திரையுலைகில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் போராடி மேலே வந்த நடிகர்களில் அஜித் முக்கியமானவர். 10ம் வகுப்புக்கு மேல் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் டெக்ஸ்டைல் தொழிலில் நுழைந்தவர். நண்பர்கள் வற்புறுத்தியதால் மாடலிங்கில் நுழைந்தார். ஒரு செருப்பு விளம்பரத்தில் கூட நடித்தார்.
பைக் மற்றும் கார் ஓட்டுவது ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட அது தொடர்பான ரேஸ்களிலும் கலந்து கொண்டார். சினிமாவில் போராடி அமராவதி திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் கிடைக்கும் படங்களிலெல்லாம் நடித்து தோல்வி படங்களை கொடுத்தார். வான்மதி, ஆசை ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே இயக்குனர்களால் கவனிக்கப்பட்டார். அதன்பின் மெல்ல மெல்ல முன்னேறி ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
அமர்க்களம், பில்லா, மங்காத்தா என அடித்து ஆடினார். அவரின் மார்க்கெட் எங்கோ சென்றது. அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றனர். அதேநேரம், பல தோல்விப்படங்களை கொடுத்தவர் அஜித். தடுமாறி தடுமாறித்தான் இப்போது இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவரின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அடுத்து தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆனால், இதே அஜித் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிப்பதையே நிறுத்த முடிவெடுத்தார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், உண்மை அதுதான். அதாவது அவர் சினிமாவுக்கு வந்து சில வருடங்களிலேயே இந்த முடிவை எடுத்தார். இது தனக்கு நெருக்கமான பலரிடமும் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் கூறிய இயக்குனர் சுந்தர் சி ‘என் இயக்கத்தில் உன்னைத் தேடி படத்தில் அஜித் நடித்தார். பைக் ரேஸில் கலந்து கொண்டு அடிபட்டதால் முதுகுவலியில் அவதிப்பட்டு வந்தார். எனவே, சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறேன் என என்னிடம் சொன்னார். ஆனால், ‘உங்களை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. எனவே, சினிமாவில் தொடர்ந்து நடியுங்கள்’ என்று நான் சொன்னேன்’ என சுந்தர் சி கூறினார்.
அஜித் உடலில் 34 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்படும். ஆனாலும், வலிகளை பொறுத்துக்கொண்டு கடந்த 20 வருடங்களாக அஜித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடகத்தை பார்த்து கூச்சலிட்ட ரசிகர்கள்!.. மறுநாள் வித்தியாசமான போஸ்டருடன் அனைவரையும் மிரளவைத்த நடிகவேள்..