அந்த படத்த தூக்கி நம்ம படத்துல சொருவு!.. இப்படி ஆயிட்டாரே அஜித்!.. விளங்குமா விடாமுயற்சி?!...

துணிவு படம் வெளியாகி எட்டு மாதம் ஆகிவிட்டது. இதுவரை அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. விக்னேஷ் சிவன் இயக்குனர் என அறிவிக்கப்பட்டு அவர் சொன்ன கதை பிடிக்காமல் அவரை தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை போட்டார்கள். அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்திருந்தது. விடாமுயற்சி என தலைப்பு வைத்தார்கள்.

ஆனால், அது வேண்டாம். இந்த கொரியன் படத்துல இருந்து உருவி கதை பண்ணுங்க என அஜித் ஒரு படத்தை சொல்ல அதை டெவலப் செய்தனர். அதன்பின் ‘அது வேண்டாம். நீங்களே கதை பண்ணுங்க’ என சொல்ல மகிழ் திருமேனி வேறு ஒரு கதையை உருவாக்கினார்.

இதையும் படிங்க: ரஜினி, விஜய், அஜித் கிட்ட இல்லாத பணமா!.. மக்கள் கிட்ட இன்னும் எவ்ளோதான் சுரண்டுவீங்க!.. நியாயமா விஷால்?..

இந்த கதை லைக்கா மற்றும் அஜித் என இருவருக்கும் பிடித்திருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு ஜாலியாக உலகை சுற்றப்போனார். சில மாதங்கள் கழித்து திரும்பி வந்தார். செப்டம்பர் மாதம் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால், அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே இந்தியன் 2, ரஜினியின் அடுத்த படம் என கையில் சில படங்களை லைக்கா நிறுவனம் வைத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறையிலும் அந்நிறுவனம் சிக்கியது. எனவே, விடாமுயற்சி டேக் ஆப் ஆகுமா என்கிற சந்தேகமும் எழுந்தது.

இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’யை மெகா ஹிட்டாக்க அஜித்துடன் கூட்டணி அமைக்கும் பிரபலம்!.. தரமான சம்பவம் இருக்கு!..

ஆனால், கண்டிப்பாக விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் துபாயில் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், 1997ம் வருடம் பாலிவுட் நடிகர் கர்ட்ரஸ்ஸல் ஹீரோவாக நடித்து வெளியான பிரேக் டவுன் எனும் படத்தின் கதையை தழுவித்தான் விடாமுயற்சி படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போதெல்லாம் அஜித் இயக்குனர்கள் உருவாக்கும் கதையை நம்புவதில்லை. அவர் பார்த்த ஹாலிவுட் மற்றும் கொரியன் படத்தின் கதைக்கருவை எடுத்து அதை தனக்கு ஏத்த மாதிரி மாற்ற சொல்கிறாராம். ஹெச். வினோத்திடம் துவங்கி மகிழ் திருமேனியிடம் தொடர்து அடுத்து அஜித்தை வைத்து இயக்கப்போகும் சிறுத்தை சிவா வரை இது தொடர்கிறதாம்.

இப்படி ஆயிட்டாரே அஜித்!...

இதையும் படிங்க: அஜித் சொன்னதால்தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாரா விஜய்?.. தெய்வ வாக்கு தல!…

 

Related Articles

Next Story