
Cinema News
தெறி மாஸ்!..மரண மாஸ்…இதான் அஜித்61 கெட்டப்பா!… அஜித்தின் ரீசன்ட் கிளிக்ஸ்….
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், இப்படம் வங்கி கொள்ளை தொடர்புடையது ஏற்கனவே செய்தி வெளியாகிவிட்டது.
மேலும், நீண்ட தாடி ,வெள்ளை முடி என அசத்தலான கெட்டப்புக்கு மாறியுள்ளார். மங்காத்தா போல நெகட்டிவ் வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு, இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.வலிமை திரைப்படத்தில் அஜித்தின் தோற்றத்தை பலரும் கிண்டலத்ததால் அஜித் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கான கெட்டப்போடு நடிகர் ஆதியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Ajith61 என்கிற ஹேஷ்டேக்குடன் அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
வலிமை திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால் அஜித்61 படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் படி
உருவாக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது..