3 நாடுகளுக்கு பைக்கிலேயே டிரிப்... தல அஜித்தின் மாஸ் திட்டம்... வைரல் புகைப்படங்கள்.....

நடிகர் அஜித் நடிப்பதை தொழிலாக மட்டுமே கொண்டவர். பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர். வலிமை படப்பிடிப்பு நடைபெற்ற போது ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் தனியாக வந்தவர் அஜித்.
சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தபோது படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டது. ஆனால், அஜித் அங்கேயே தங்கினார். ரஷ்யாவில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் செய்யும் குழுவை சந்தித்து அவர்களோ இணைந்து பைக் டிரிப் செய்துவிட்டு சென்னை திரும்பினார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியது.
அதன்பின், 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை பைக் மூலமாகவே சுற்றி வந்த பெண்ணான மாரல் யசர்லோவை டெல்லியில் அஜித் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது.
இந்த தகவலை அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். எதிர்காலத்தில் உலகையே பைக்கில் சுற்றிவர அவரிடம் ஆலோசனைகளை பெறவே அஜித் அவரை சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் யசர்லோவோடு அஜித் பேசிக்கொண்டிருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், சாலை வழியாக யூரோப்,ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற 3 நாடுகளை பைக் மூலம் பயணம் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது அஜித் விரைவில் இதை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.