Categories: Cinema News latest news

இணையத்தில் வைரலாகும் அஜித் பேமிலி போட்டோ…ஆனா, தல ஹேர்ஸ்டைல் பத்தி நாங்க பேசமாட்டோம்…

அஜித்குமார் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜித் முழு கலரிங் அடித்த முடியுடன் வித்தியாசமாக காட்சி அளிக்கிறார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இருக்கும் படம் துணிவு. இப்படத்தினை போனி கபூர் தயாரித்து இருக்கிறார். வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

Ajith Kumar

இந்த மாதம் தான் கடைசி என்பதால் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் குறித்த அப்டேட்களும் வெளியாகும் என ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். இப்படத்திற்காக அஜித் பெரிய தாடி வைத்து சுற்றிக்கொண்டு இருந்தார். முடியை கூட பெரும்பாலும் வெள்ளையாகவே வைத்து இருந்தார்.

துணிவு படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் அஜித் தனது தாடியை மொத்தமாக சேவ் பண்ணி க்ளீன் லுக்கில் காட்சி அளிக்கிறார். அவருடன் ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக்குடன் இருக்கும் ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar

இப்படத்தில் அஜித் தனது முடியை முழுவதும் ப்ரவுன் கலரில் மாற்றி இருக்கிறார். சிலர் அஜித்தை செம அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வந்தாலும், என்ன சார் பீடாவ போட்டு துப்பிட்டாங்களா என கலாய் வசனங்களும் இந்த போட்டோவுக்கு போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மூன்று ஆண்டு கால உழைப்பு!.. தன் தலைவனுக்காக விட்டுக் கொடுப்பாரா லாரன்ஸ்?..

துணிவு படத்தினை முடித்துக்கொண்டு விடுமுறைக்கு பறந்து இருக்கும் அஜித், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தில் பல வருடம் கழித்து த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Published by
Akhilan