‘கோட்’ படத்தில் அஜித் நடிக்க வேண்டிய கதாபாத்திரமா அது? எவ்ளோ பெரிய விஷயம்? சாதாரணமா சொல்றாரே

Published on: August 11, 2024
prasanth (1)
---Advertisement---

Goat Movie: விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் , பிரசாந்த், பிரபுதேவா மூவர் கூட்டணியில் உருவாகும் இந்த கோட் படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா , மோகன் போன்ற பல நடிகர்களும் நடித்திருக்கின்றனர். படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது.

இந்த நிலையில் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் படம் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் அந்தகன் படம் ரிலீஸானது.ஏன் இந்த பெரிய இடைவெளி என்று அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்க சரியான நேரம் பார்த்துதான் தியாகராஜன் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளியின் நான்காவது எலிமினேஷன்.. வெளியேறறப்பட்ட விஜய் டிவி பிரபலம்…

ஒருவேளை கோட் படத்திற்கு பிறகு அந்தகன் படம் ரிலீஸானால் விஜயுடன் நடித்த நேரம். படம் ஹிட் என்ற பெயர் கண்டிப்பாக வந்திருக்கும். அதனால் புத்திசாலித்தனமாக யோசித்து கோட் படத்திற்கு முன்பே படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார் தியாகராஜன். இந்த நிலையில் பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி அந்தகன் படத்தை பற்றி அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஜோடி படத்தை இயக்கியவர்தான் பிரவீன் காந்தி. 20 வருடத்திற்கு முன்பு ரசிகர்களுக்கு தீனி போட்ட இந்த ஜோடி இப்பொழுதும் தீனி போட்டிருக்கின்றனர் என்று பிரவீன் காந்தி கூறியிருக்கிறார். படம் எங்கேயும் சுவாரஸ்யம் குறையாமல் வச்ச கண் மாறாமல் படத்தை பார்க்க வைத்திருக்கிறார் தியாகராஜன்.

இதையும் படிங்க: வாழ்க்கை ஒரு வட்டம்டா!.. மறுபடியும் வருவேன்!.. விஜய் வசனம் பேசி அதிர வைத்த பிரசாந்த்!…

கார்த்திக் கொலைக்கு பிறகுதான் படம் சூடுபிடிக்கும். அதுவும் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் தியாகராஜன். சமுத்திரக்கனி, வனிதா, யோகிபாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார் என ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்துவமான நடிப்பு என அந்தகன் படம் பெரிய அளவில் வந்து பிரசாந்திற்கு ஒரு கம்பேக்காக இருக்கிறது என பிரவீன் காந்தி கூறினார்.

கோட் படத்தில் பிரசாந்த் கமிட் ஆன போதே பிரவீன் காந்தியிடம் தியாகராஜன் ‘பிரசாந்த் ஒரு பெரிய படத்தில் பெரிய கூட்டணியில் இணைந்திருக்கிறார்’ என கூறினாராம் .அதற்கு பிரவீன் காந்தி ‘அப்படியா சார்? யார் படத்தில்? யார் நடிக்கும் படம்?’ என கேட்டிருக்கிறார். அதற்கு தியாகராஜன் ‘விஜய், அஜித், பிரசாந்த் இவர்களை வைத்து அந்த நிறுவனம் பெரிய அளவில் ப்ளான் செய்து கொண்டிருக்கிறது’ என கூறினாராம்.

இதையும் படிங்க: 2வது நாளில் 2 மடங்கு வசூல்!.. பாக்ஸ் ஆபிசில் இறங்கி அடிக்கும் அந்தகன்!….

இதை கேட்டதும் பிரவீன் காந்திக்கு பெரிய ஷாக். உடனே தியாகராஜனிடம் ‘சார். பெரிய அளவில் படம் வரப் போகிறது. சந்தோஷம்’ என சொல்ல அதன் பிறகு அஜித் இந்தப் படத்தில் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. அஜித் நடிக்கும் கேரக்டரில்தான் இப்போது பிரபுதேவா நடிக்கிறாராம். இவர் சொல்வதை பார்த்தால் வெங்கட்பிரபு இவர்கள் கூட்டணியை சேர்க்க கண்டிப்பாக முயற்சி செய்திருப்பார் என்றே தெரிகிறது.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.