அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். அதன்பின் பல படங்களிலும் சாக்லேட் பாயாக நடித்து வந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறினார். குறிப்பாக தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அஜித்தை ஒரு மாஸ் நடிகராக மாற்றியது. இந்த படங்கள்தான் அஜித்துக்கு அதிக ரசிகர்களையும் கொண்டு வந்தது.
அதன்பின் கடந்த பல வருடங்களாகவே அஜித் பக்கா ஆக்சன் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் கூட மாஸான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது
. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
Also Read
பொதுவாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் வில்லனாக நடிக்க சொன்னால் சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் ரசிகர்களிடம் அவர்களின் இமேஜ் மாறிவிடும் என நினைப்பார்கள். அதோடு தொடர்ந்து வில்லனாக நடிக்க மட்டுமே கேட்பார்கள் என்பதால் அந்த மாதிரி வாய்ப்பு வந்தால் தவிர்த்து விடுவார்கள். ஆனால் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித் படம் முழுவதும் நெகட்டிவ் வேடத்திலேயே நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த வெங்கட் பிரபு ‘மங்காத்தா படத்தின் கதையை நான் அஜித் சாரிடம் சொன்னபோது ‘இதில் நீங்கள் ரொம்ப மிகவும் கெட்டவராக வரீங்க!.. மக்கள் உங்களை வெறுக்க வாய்ப்பிருக்கு’ என்று சொன்னேன். ஆனால் அவரோ ‘நான் ஒன்னும் சி.எம் ஆகணும்னு ஆசைப்படலயே.. நான் ஒரு நடிகன்.. எனக்கு வேற மாதிரி தீனி வேணும்’னு சொன்னார் என சொல்லியிருக்கிறார்.



