இமயமலையில் பைக் ஓட்டி அசால்ட் காட்டும் அஜித்...தாறுமாறா வைரலாகும் வீடியோ...

by சிவா |
ajith
X

நடிகர் அஜித்திற்கு நடிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற பல விஷயங்களில் ஆர்வம் உண்டு. எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை தவறாமல் செய்து வருபவர்.

ajith

சில மாதங்களுக்கு முன்பு பைக் பயணம் மேற்கண்ட அஜித் சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை சென்றார். அங்கு ராணுவ வீரர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனத்தில் பைக்கில் நிழலில் அவர் மணலில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரலானது.

ajith

இந்நிலையில், மீண்டும் சில நண்பர்களுடன் இமயமலை பகுதியில் அவர் பைக் பயனம் செய்துள்ளார். ஏற்கனவே சில புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது அவர் பைக் ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith

வலிமை படத்திற்கு பின் அஜித் தற்போது மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story