Connect with us

Cinema History

பைக் மெக்கானிக் டூ மாஸ் நடிகர்!.. அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத அரிய தகவல்கள்!..

அஜீத்ன்னு சொன்னாலே அது ‘விடாமுயற்சியும்’, ‘தன்னம்பிக்கையும்’தான்.   தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர்.  இந்த  இடத்தை அடைய இவர் பட்ட  துயரங்கள் ஏராளம்.  இவருடன் இருந்த பலர்,  இவரெல்லாம் அவ்வளவுதான்,  இனி மீளமாட்டாடர் என ஒதுக்க நினைத்த போது,   அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என முன்னேறிக்காட்டியவர்.

பள்ளி படிப்பின் மீது அதிக ஆர்வம் இல்லாமல் இருந்த இவரது சகோதரர்கள் அதிகம் படித்தவர்கள். பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர் ,  தனது நண்பர்களுடன் பைக் பந்தயங்களில் பங்கேற்றவர். பைக் மெக்கானிக்காவும் கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்கிறார்.

அதன்பின் மெடிக்கல் ரெப் ஆக பணிபுரிந்த இவர்,  பின்னர் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அதில் குறுகிய காலத்திலேயே மேலாளராக பதவி உயர்வு பெற்றார். ‘ஆள் பார்க்க அழகா இருக்கியே சினிமாவுல நடி’ என அஜித்துக்கு நடிப்பின் மீது ஆசை ஏற்பட்டது.  சில விளம்பர படங்களில் நடித்தார்.

ajith1

ajith1

அப்படி இருக்கயில்தான் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.  இவரது முதல் படமான “பிரேம புத்தகம்” வெளிவரும் முன்னரே அந்த படத்தின் இயக்குனர் விபத்தில் பலியானார். இவரது திறமைக்கு கிடைத்த முதல் பெயரே “ராசியில்லாதவன்”.   “அமராவதி” படம் இவரை சிறிது உயர்த்திவிட,  ரசிகர்களிடையே பரீட்சயம் ஆக துவங்கினார்.

கார் பந்தயங்கள், பைக் ரேஸ்களில் அலாதி பிரியம் கொண்டிருந்த இவர்,  நடித்துக்கொண்டே அவற்றிலும் பங்கேற்றார்.  ஒரு சமயம் இவர் பங்கேற்ற பந்தயத்தில் ஏற்பட்ட கொடூர விபத்தினால் வெகு நாட்கள் படுக்கையிலேயே கழித்தார்.  மீண்டு வந்து நடிக்க துவங்கினார்.  விஜயும் இவரும் இணைந்து “ராஜாவின் பார்வையிலே”  என்ற படத்தில் நடித்தனர்.  இவருக்கும் சேர்த்து விஜயின் தாயார் ஷோபா உணவு எடுத்து வருவாராம்.  இருவருக்கும் அவரது கைகளாலே சாப்பாடு பரிமாறுவாராம்.

ஒரு கட்டத்தில் நல்ல நிலையை வந்தடைந்த அஜீத் தன் வீட்டில் பணியாற்றிய பணியாளர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் புது வீடு கட்டிக்கொடுத்துள்ளார் .  இந்தியாவின் பிரபலங்கள் பற்றி  ஒரு பத்திரிக்கை நடத்திய கருத்துகணிப்பில் குறிப்பிட்ட ஒரு இடத்தையும் பிடித்தார்.  இன்று இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றி, இவர் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களுக்காக படத்தை பார்க்க செல்லும் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

ஒரு காலத்தில் இவர்  வசனம் உச்சரிக்கும் விதம் இவருக்கு மிகப்பெரிய எதிர்மறை விமர்சனத்தை பெற்றுக்கொடுத்தது. ஆனால் “வாலி” படத்தில் பேசாமலேயே இவர் நடித்த அண்ணன் கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. உடல்நிலை, ராசியில்லாதவன் என அதிக பிரச்சனைகளை பார்த்த இவர். தனது தன்னம்பிக்கையால் இன்று வெற்றி வலம் வருகிறார். அதோடு இன்றைய இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்து வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top