Pushpa 2: வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா 2 .சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பெருமளவு கவர்ந்தது. படமும் நல்ல வசூலை வாரி இறைத்தது .விமர்சன ரீதியாகவும் படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
அல்லு அர்ஜுனின் மாஸான நடிப்பு என அனைவரையும் இந்த படம் கவர்ந்தது .இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது முடிவடைந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது .அதற்காக பல ஊர்களில் இந்த படத்திற்கான புரமோஷன் நடந்து வருகிறது. நேற்று சென்னையில் சாய்ராம் கல்லூரியில் படத்திற்கான ப்ரோமோஷன் பெரிய அளவில் நடைபெற்றது.
இதையும் படிங்க: அடடடடா! அப்பப்பா.. நயன் நடிச்ச படத்தை பார்த்து மகன்கள் இருவரும் கொடுத்த ரியாக்ஷன்
ஒட்டுமொத்த அரங்கமும் ரசிகர்களால் கூறியிருக்க விஜய்க்கு எந்த அளவுக்கு ஒரு மாஸ் இருக்குமோ அதற்கு இணையாக அல்லு அர்ஜுனுக்கும் நேற்று நல்ல ஒரு வரவேற்பை கொடுத்திருந்தனர். அதற்கேற்ற வகையில் அல்லு அர்ஜுன் மேடையில் பேசிய சில கருத்துக்களும் ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றன. குறிப்பாக சாய்ராம் கல்லூரியில் தெலுங்கு மாணவர்கள் அதிகமாம்.
அதனால் அல்லு அர்ஜுன் மேடையில் பேசும்பொழுது அங்குள்ள மாணவர்கள் சிலர் தெலுங்கில் பேசுங்கள் என கத்தி கூச்சல் இட்டனர். அதற்கு அல்லு அர்ஜுன் இங்கு இருக்கிற இடத்துக்கு மரியாதை கொடுக்கணும். இது தமிழ்நாடு .அதனால் தமிழில் தான் பேசுவேன். ஹிந்திக்கு போனால் ஹிந்தியில் பேசுவேன். துபாய்க்கு போனால் அரபியில் பேசுவேன். எந்த இடத்திற்கு போறோமோ அந்த மொழியில் பேச வேண்டும் .

அந்த மொழிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என அனைவருக்கும் புரியும் அளவுக்கு தன்னுடைய கருத்தை ஆழமாக கூறினார் அல்லு அர்ஜுன். இதுதான் எப்போது சோசியல் மீடியாவில் பெரும் பேசு பொருளாகி வருகின்றது. அதுமட்டுமல்ல அவர் இந்த அளவு மரியாதை கொடுத்து பேசியது இங்குள்ள கோடம்பாக்க நடிகர்களுக்கு ஆப்பு வைத்தார் போல மாறியிருக்கிறது .
இதையும் படிங்க: ஒரு 20 தடவ கேட்டுருப்பேன்!.. இத நீங்க தான் எழுதுனீங்களா?.. செல்வராகவனை பிரமிக்க வைத்த இயக்குனர்!..
குறிப்பாக அல்லு அர்ஜுன் பேசிய அந்த வீடியோ கிளிம்ப்சை போட்டு கீழே கார்த்தியின் புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்கள் கார்த்தியை வச்சு செய்து வருகின்றனர். ஏனெனில் ஒரு சமயம் ஆந்திராவிற்கு சென்ற கார்த்தியிடம் உங்களுக்கு பிடித்த ரசிகர்கள் தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா என கேட்டிருப்பர். அதற்கு கூசாமல் தெலுங்கு ரசிகர் என பதிலளித்திருப்பார் கார்த்தி. அது பெரும் வைரலானது. இடத்திற்கு ஏற்ப அவர் மாறுவதை உணர்த்தியது .அதனால் இங்கு உள்ள நடிகர்கள் எல்லாம் அல்லு அர்ஜுனை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என கார்த்தியின் புகைப்படத்தை கிண்டல் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
