Categories: latest news

‘வாடிவாசல்’ படத்தில் தன்னுடைய கேரக்டரை உறுதிசெய்த அமீர்! இங்கேயும் சண்டைதானா?

Actor Ameer:  நேற்று அமீர் நடிப்பில் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முறையாக இந்தப் படத்தில் தான் அமீர் தாடி இல்லாமல் நடித்திருக்கிறார். அதுவே மிகவும் கஷ்டமாக இருந்தது என ஒரு பேட்டியில் அமீர் கூறி இருந்தார். அது மட்டும் அல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் போது தாடி இல்லாமல் அவருடைய வீட்டிற்கு போனபோது அவருடைய மனைவியால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

அதன் பிறகு படப்பிடிப்பு எல்லாம் முடிந்து மீண்டும் தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டேன் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இயக்குனராக மட்டும் இல்லாமல் ஒரு நடிகராகவும் தான் யார் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார் அமீர். ஏற்கனவே பருத்திவீரன் பட பிரச்சனை தொடர்பாக கேஸ் நீதிமன்றத்தில் போய்க் கொண்டிருக்கையில் அமீரின் இந்தப் படம் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாருடன் காதலில் இருந்த ஜெமினி கணேசனின் மகள்… போராடி மீட்ட மனைவி…

அந்த எதிர்பார்ப்பையும் பெரிய அளவில் பூர்த்தி செய்திருக்கிறது. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த அமீர் வாடிவாசல் படத்தை பற்றிய ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராக போகும் திரைப்படம் வாடிவாசல். வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகம் முடித்ததும் வாடிவாசல் திரைப்படத்திற்கு தான் வருவார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அமீரும் நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இப்போது அவருடைய கதாபாத்திரம் என்ன என்பதை அமீரே சமீபத்தில் கூறியிருக்கிறார். படத்தில் ஹீரோவுடன் முழுக்க பயணம் செய்யும் ஒரு வில்லன் கதாபாத்திரம் தான் தன்னுடைய கதாபாத்திரம் என மிகவும் ஓப்பனாக சொல்லி இருக்கிறார் அமீர். அது மட்டும் அல்லாமல் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் இணைவதை நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியவர் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்த படத்தின் மூலம்தான் இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அஜித்துக்கு ஜோடியாகும் வாய்ப்பை மிஸ் பண்ண ‘சேது’ பட ஹீரோயின்! என்ன படம் தெரியுமா?

Rohini

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

14 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago