Connect with us

‘ஜெய்லர்’ படத்தில் கேமியோ ரோலில் மற்றுமொரு சூப்பர் ஸ்டாரா?.. தலைவர் பக்கா ப்ளானோடு தான் இருக்காரு!..

rajini

Cinema News

‘ஜெய்லர்’ படத்தில் கேமியோ ரோலில் மற்றுமொரு சூப்பர் ஸ்டாரா?.. தலைவர் பக்கா ப்ளானோடு தான் இருக்காரு!..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க ரஜினியின் அடுத்த படத்திற்கான அப்டேட்களும் வந்து கொண்டிருக்கின்றன.

rajini1

rajini1

அந்த அளவுக்கு சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஜெய்லர் திரைப்படத்தில் ஏற்கெனவே சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற மற்ற மொழி சினிமாக்களில் ஆளுமைகளாக இருக்கும் நடிகர்கள் நடிக்க இந்தப் படத்தை எப்படியாவது ஒரு பெரிய பேன் இந்தியா படமாக உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம் ரஜினி.

முதலில் ஜெய்லர் படத்திற்காக எழுதப்பட்ட கதையே வேறயாம். அதன் பின் ரஜினி ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா போன்ற படங்களை எல்லாம் பார்த்து விட்டு ஜெய்லர் திரைப்படத்தையும் ஒரு பேன் இந்தியா படமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு கதையில் சிலபல மாற்றங்களை செய்தாராம்.

rajini2

rajini2

நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளிவந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க : நடு ராத்திரியில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஜெயலலிதா… நடந்தது என்ன?

இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படத்தில் மற்றுமொரு சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் ஜெய்லர் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

rajini3

rajini amitab

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top