More
Categories: Cinema History Cinema News latest news

ரஜினி அப்படி சொன்னதும் காலில் விழுந்த ஆனந்த்ராஜ்… நடந்த கூத்தைப் பாருங்க…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ராஜாதிராஜாவுக்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு பாட்ஷா படத்தில் நடித்தார் ஆனந்த்ராஜ். இதுகுறித்து அவர்என்ன சொல்றார்னு பார்ப்போமா…

அது என்னமோ தெரியல பெரிய கேப். ராஜாதி ராஜாவுக்குப் பிறகு மிகப்பெரிய கேப். 12 வருடங்களாக இடையில நடிக்கல. ராஜாதி ராஜா ரிலீசுக்கும் பாட்ஷாவுக்கும் இடையில நடிக்கல. அப்போ ஹீரோவாயிட்டேன். நம்மாளுக தான் கைதட்டுனா ஹீரோவா ஆக்கி விட்டுருவாங்கள்ல. பாட்ஷா படத்துல நடிக்க ரஜினி சார் அழைத்தார். சுரேஷ்கிருஷ்ணா எனக்கு முன்னாடி ராஜா கைய வச்சா படம் பண்ணினாரு.

Advertising
Advertising

இதையும் படிங்க… ரஜினியிடம் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்த கவுண்டமணி… ஆனா அவரு சொன்னது அப்படியே நடந்துடுச்சே..!

எனக்கு ஸ்பேஸ் கம்மியா இருக்கும். அதுக்குள்ள நான் ஜெயிக்கணும்னு நினைப்பேன். எனக்கு கிடைக்கிறது சிறிய உணவு தான். அதைப் பயன்படுத்தணும்னு நினைப்பேன். சுரேஷ்கிருஷ்ணா எனக்கு நல்ல அறிமுகமா இருந்ததால பாட்ஷால எனக்கு அறிமுகம் இருந்துச்சு. கதை சொன்னதும் எனக்குப் பிடிச்சிடுச்சு. எனக்கு பொறாமையே கிடையாது. எனக்கு கதையே தெரியாது. தேவன், ரகுவரன், சரண்ராஜ்னு நிறைய நடிகர்கள் இருக்காங்க. இவ்ளோ பேரு இருக்காங்க.

நாம என்ன பண்ணப் போறோம்னு நினைச்சேன். சின்னதா இருந்தாலும் நான் விளையாடறதுக்கு இடம் இருக்கான்னு கேட்குறேன். கடைசி 10 நாள்ல படம் ரிலீஸாகப் போகுது. நான் ரஜினி சார்கிட்ட கேட்டேன். நிறைய பேரு வில்லனா இருக்காங்க. ‘என்னைப் போயி ஏன் கூப்பிட்டீங்க சார்’னு கேட்டேன். ‘இல்ல இதான் முதல்ல எடுக்கணும். ஆனா எடுக்கல. என்னைக் கட்டி வச்சி அடிக்கணும்’னு சொன்னார். எனக்கு எப்படி இருக்கும்னு பாருங்க. ‘நான் கிளம்புறேன் சார். சாரி’ன்னுட்டேன்.

இதையும் படிங்க… நம்புனா நம்புங்க… விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுதான்… அடித்து சொல்லும் தயாரிப்பாளர்

சுரேஷ்கிருஷ்ணா, பாலகுமாரன் சார்னு எல்லாரும் இருக்காங்க. ‘இல்ல உட்காருங்க. நாங்க வந்து நிறைய பேரை ட்ரை பண்ணுனேன். ஆனா அவங்க எல்லாம் அடிச்சா ஆடியன்ஸ் ஒத்துக்க மாட்டாங்க. அதுக்கு சரியான ஆள் நீங்க தான்’னு சொன்னாரு ரஜினி. கால்ல விழுந்துட்டேன். ‘ஓகே. சார்’னு சொன்னேன். அப்படி வந்த படம் தான் பாட்ஷா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
ராம் சுதன்

Recent Posts