காதல் மட்டும் ஓகே.. கல்யாணம் வேண்டாம்!.. நிஜ வாழ்க்கையில் பிரிந்த நடிகர் – நடிகைகளின் லிஸ்ட்!…

Published on: January 31, 2024
Thrisha-NRM
---Advertisement---

சினிமா உலகில் காதலித்து கல்யாணம் வரை வராமல் போன ஜோடிகள் நிறைய பேர் இருக்காங்க. அவர்கள் யார் யார் என லிஸ்ட் எடுத்தால் அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு நடிகர், நடிகைகளின் கிசுகிசுக்கள் குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பார்க்கலாமா…

விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த கண்ணு பட போகுதய்யா. இது இயக்குனர் பாரதிகணேஷின் முதல் படம். இந்தப் படத்திற்கு ஒரு பாடலைக் கம்போஸ் பண்ண ராஜூசுந்தரத்திடம் சொல்கிறார்கள். விஜயகாந்தும், சிம்ரனும் ஆடும் டூயட் சாங். பாடல் முடிந்ததும் அதை மானிட்டரில் பார்க்கிறாங்க. ஆனா அது டூயட் இல்ல. ரெண்டு பேரும் சோலோவா ஆடிக்கிட்டு இருக்காங்க.

Ajith, Heera
Ajith, Heera

என்னய்யா இது டூயட்னு சொன்ன… ரெண்டு பேரும் தனித்தனியா ஆடிக்கிட்டு இருக்கோம்னு கேப்டன் கேட்கிறார். உடனே ‘அது வந்து சார், இது வந்து சார்’னு ராஜூசுந்தரம் மழுப்பினாராம். அதுக்குப் பிறகு தான் விஷயமே தெரிந்தது. ராஜூசுந்தரத்துக்கு சிம்ரன் வேறு யாரு கூடயும் ஜோடியா ஆடுறது பிடிக்காதாம். அந்தளவு பயங்கர லவ்வாம்.

அதே போல ஐ லவ் யூ டா என்ற படத்தில் ராஜூசுந்தரம், சிம்ரன் ரெண்டு பேரும் ஜோடியா நடிச்சாங்க. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு எல்லாம் பேச்சு அடிபட்டது. அப்புறமா பிரிஞ்சிட்டாங்க. சுந்தரம் மாஸ்டர் தான் வேணாம்னு சொன்னாராம்.

அதே மாதிரி பிரபுதேவாவும் ரமலத்தை கல்யாணம் பண்ணினார். வீட்டிலேயே கடும் எதிர்ப்பு. அப்புறம் மனக்கசப்பு வந்து பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். நயன்தாராவுடன் கிசுகிசு வந்ததும் அவர்களும் பிரிந்து விட்டார்கள். அப்புறமா பிரபுதேவா டாக்டரை திருமணம் செய்தாராம். நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சைக் குத்தியிருப்பார்.

VS-RS
VS-RS

நடிகைகள் யாரை வேணாலும் நம்பிடுறது, 10 நிமிடம் யாராவது அன்பாகப் பேசினால் அதுதான் உண்மையான அன்புன்னு ஏமாந்து விடுகிறாங்க. விஜய் சங்கவி ஜோடி கிசுகிசு கல்யாணம் வரை ரொம்ப வந்தது. அதற்கு எஸ்ஏசி கடும் எதிர்ப்பு. விஜய், சுவாதி பற்றியும் கிசுகிசு வந்தது.

அதே போல அஜீத், ஷாலினியைக் கல்யாணம் பண்ணிய பிறகு ராமனாவே மாறிட்டாரு. அதே நேரம் கல்யாணத்துக்கு முன்னாடி அவருடன் ஹீரா பற்றிய கிசு கிசு வந்தது.

அதே போல நடிக்க வந்து திருமணம் செய்து கொண்டு காணாமல் போன நடிகைகளும் பல பேர் இருக்காங்க. சிம்பு ஒரு மச்சக்கார நடிகர். திரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா என பலருடன் கிசுகிசு வந்தது. நயன்தாராவுடன் தான் ரொம்ப கிசு கிசு வந்தது. வல்லவன் படத்திற்குப் பிறகு அந்தக் காதலும் பிரேக் அப் ஆனது. சிம்பு, ஹன்சிகா காதலும் பிரேக் அப் ஆனது.

விஜயகாந்த், ராதிகா காதல் பிரேக் அப்புக்கும் ராவுத்தர் தான் காரணம். ராதிகா வந்தால் தனது செல்வாக்கு குறைந்துவிடும் என்று நினைத்தாராம். அதனால் தான் விஜயகாந்த் காதலுக்குத் தடை போட்டாராம். ஆனால் பிரேமலதா வந்ததும் அவர்களது நட்பே கட்டாகிப் போனது. அதே போல சரத்குமார் தேவயாணி, நக்மா, ஹீரா வரை கிசுகிசு வந்தது.

திரிஷாவுக்கு தெலுங்கு நடிகர் ராணா டகுபதி வரை காதல் கிசு கிசு வந்தது. ஆனால் என்ன காரணமோ தெரியல. பிரேக் அப் ஆகிவிட்டது. அதே போல வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று பிரேக் அப் ஆனது. ராஷ்மிகா மந்தனாவுக்கு ரக்ஷித் உடன் நிச்சயதார்த்தம் வரை வந்து பிரேக் அப் ஆனது. விஜய் தேவரகொண்டாவுடனும் இந்த கிசு கிசு வந்தது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.