விநோதமான பழக்கம் என்பது நம்மில் பலருக்கும் அதிகமாகவே இருக்கும். அதைப்போல நம் திரையில் ரசிக்கும் நடிகர்களுக்கும் நாம் நினைக்காத அளவு சில விநோத பழக்கம் இருக்கும் என்றால் நம்புவீர்களா? அப்படி பழக்கம் இருக்கும் சில பிரபலங்கள் உங்களுக்காக…
உலக சினிமாவே திரும்பி பார்க்கும் நபர் தான் கமல்ஹாசன். வயசு அதிகரிக்க இவர் இளமை தான் கூடிக்கொண்டே இருக்கிறது. அப்படி ஃபிட்டாக இருக்கும் கமல்ஹாசனின் விநோத பழக்கம் தான் இங்கே ஹைலைட். உடம்பை கட்டிக்காக்க பட்டினியாக கிடைக்கும் வேலை கமலிடம் இல்லை. சாப்பாட்டுக்கே தன் வாழ்க்கை என்னும் அளவுக்கும் சாப்பிடுவாராம். அவரின் சாப்பாட்டு அளவை பார்த்த சிவாஜிக்கே திக்கென்று இருந்ததாக கூறப்படுகிறது. வகைவகையாக சாப்பிடும் கமல்ஹாசனுக்கு ஈசல் பிரியாணி தான் ரொம்ப பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.
புஷ்பா படத்தின் மூலம் தற்போது ஹிட் லிஸ்டில் இருப்பவர். ராஷ்மிகா தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார். இவரிடம் இருக்கும் விநோத பழக்கம் என ஒரு பேட்டியில் இவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, நான் ரசத்தை பிரியாணியில் ஊற்றி சாப்பிடுவேன் எனக் கூறி இருக்கிறார். அடேங்கப்பா! அதுமட்டுமல்லாது, லேஸ் சிப்ஸ் இல்லாமல் அம்மணிக்கு ஒருநாள் கூட உணவு இறங்காதாம். அதையும் சும்மா சாப்பிட்டால் பரவா இல்லை. நூடுல்ஸ் இல்லை சாதத்துடன் பிசைந்து தான் சாப்பிடுவாராம்.
இந்தி சினிமாவின் கான்களில் முக்கியமானவர் ஷாருக்கான். ஷாருக் படங்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். ஆனால் ஷாருக்கிற்கு வீடியோ கேம்கள் என்றால் தான் ரொம்ப பிடிக்குமாம். எந்த அளவு என்றால் எங்கு சென்றாலும் ஒரு வீடியோ கேமை வாங்கி வந்து விடுவாராம். அதற்கென தன் மன்னர் பங்களாவில் ஒரு தளத்தையே அமைத்து விதவிதமான கேம்களை வைத்திருக்கிறார். அதுப்போல, ஷாருக்கிற்கு ஐஸ்க்ரீம்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் கூட ஜெயிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். அம்மணி சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வேலை, வாழ்க்கை என பிஸி மோடில் சுற்றி வருகிறார். அவருக்கு இருக்கும் ஒரு முக்கிய பழக்கம் என்றால் கோயிலுக்கு செல்வது தானாம். இதில் என்ன விநோதம் என்றால், நயன் ஒரு மலையாள கிறிஸ்டியன். இவர் செல்வது என்னவோ இந்து கோயில் தான் என்பது தான் இங்கு ஹைலைட்டான விஷயம்.
தல அஜித்குமாருக்கு இருக்கும் விநோத பழக்கத்தை சொன்னால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். காரணம் ஃபிட்னெஸ் ப்ரீக்காக இருக்கும் அஜித்திற்கு நொறுக்கு தீனி என்னும் ஜுங்க் புட்ஸ் தான் ரொம்ப பிடிக்குமாம். எப்போதுமே அதை விரும்பி சாப்பிடுவார் எனக் கூறப்படுகிறது. அதிலும் பிட்சா என்றால் கொள்ளை பிரியமாம். ஆனால் தற்போது இந்த பழக்கத்தை வைத்திருக்கிறாரா என்பது அவரே அறிந்த சேதி.
ஜனநாயகன் படத்தின்…
டான் பிக்சர்ஸ்…
விஜயின் ஜனநாயகன்…
ஜனநாயகன் படத்தின்…
நடிகர் விஜய்…