More
Categories: Cinema History Cinema News latest news

குருநாதர் பாக்கியராஜ் மாதிரி படங்களை எடுக்கக்கூடாது!… இப்படியெல்லாம் யோசித்தாரா பார்த்திபன்!..

பாரதிராஜாவின் சிஷ்யன் பாக்கியராஜ். அவரது சிஷ்யன் பார்த்திபன். ஆனால் ஒருவருக்கொருவர் படைப்பில் தனி ரகம் தான். பாரதிராஜாவின் படங்களைப் போல பாக்கிராஜின் படங்கள் இருக்காது. அதே போல பாக்கியராஜின் படங்களைப் போல பார்த்திபனின் படங்கள் இருக்காது.

இயக்குனர் பாக்கியராஜின் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் முதன் முதலாக புதியபாதை படத்தை இயக்கினார். பொதுவாக எல்லா இயக்குனர்களுமே பாக்கியராஜை மாதிரி தான் படம் எடுக்க ஆசைப்படுவார்கள். ஆனால் தனது படங்களில் தனது குருநாதரின் சாயல் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாராம் பார்த்திபன். அதுதான் அவர் எடுத்த முதல் முடிவும்கூட.

Advertising
Advertising

அதே போல பார்த்திபன், பாரதிராஜாவிடமும் ஒரு சில விஷயங்களைக் கற்றுக் கொண்டாராம். தான் இயக்கும் படங்களில் தானே நடிக்கலாம் என்பது தான். அதே சமயம் பார்த்திபனைப் பொருத்தவரை, தனது படங்களில் புதிதாக எதையாவது முயற்சித்துக் கொண்டே இருப்பார். முதல் படத்தின் வெற்றிக்குக் காரணமே அவரது புதிய முயற்சி தான். அது ரசிகர்களுக்கு ஒரு புதிய விருந்தைப் படைத்தது. அதனால் அந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

பார்த்திபன் எடுத்த இரண்டாவது படம் பொண்டாட்டி தேவை. 3வது படம் சுகமான சுமைகள். மலையாளப்படத்தின் சாயலுடன் ஒரு படம் எடுக்க வேண்டும். ஆனால் அதில் கமர்ஷியல் வைக்கக்கூடாது என்று நினைத்து எடுத்தார். அதுதான் சுகமான சுமைகள். படம் பிளாப். 75 லட்சம் கடன் சுமையாகி விட்டது.

Kudaikul malai

அதே நேரத்தில் மசாலா படத்தில் இரட்டை அர்த்தங்களைக் கலந்து எடுத்தார். அதுதான் உள்ளே வெளியே. இளைஞர்கள் மத்தியில் படம் சக்கை போடு போட்டது. தனது படங்களில் தனி சுவாரசியம் இருக்க வேண்டும் என்று அதை ரசித்து ரசித்து எடுப்பார் பார்த்திபன்.

அப்படி அவர் வித்தியாசமாக எடுத்த படம் தான் ஹவுஸ்புல். இதற்காக அவர் தேசிய விருதைப் பெற்றார். பார்த்திபன், வடிவேலு காமெடி என்றால் விழுந்து விழுந்து சிரிக்கலாம். இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது. வெற்றிக் கொடி கட்டு, குண்டக்க மண்டக்க, பாரதி கண்ணம்மா படங்களைப் பார்த்தால் தெரியும்.

பார்த்திபன் படங்களைப் பொருத்தவரை அவர் சொல்ல வரும் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும். தனது கவிதைத் தொகுப்புக்குக் கூட கிறுக்கல்கள் என்று பெயர் வைத்திருந்தார். குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, இரவின் நிழல் என முரண்பாடான டைட்டில் வைப்பது இவராகத் தான் இருக்கும்.

Published by
sankaran v

Recent Posts