Categories: Cinema News latest news

என்னால என் பசங்க வீட்ட விட்டு போய்ட்டாங்க – சாக்லேட் பாய் அப்பாஸுக்கு பின்னாடி இப்படி ஒரு சோகமா?

90களில் ஒரு சாக்லேட் பாயாக சார்மிங் பாயாக இருந்து பெண்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் அப்பாஸ். தன்னுடைய 22 வயதிலேயே திருமணம் செய்திருக்கிறார் அப்பாஸ். அதுவும் அதுவரை அவர் அம்மாவுக்காக எதையும் செய்ததில்லையாம். அதனால் அம்மாவின் ஆசைக்காகவே அந்த வயதில் திருமணம் செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய படங்களாக அமைந்த காதல் தேசம், விஐபி, ஆனந்தம் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தவர்.அதுமட்டுமில்லாமல் இப்போது தான் மல்டி ஸ்டாரர் என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது.

ஆனால் நிறைய மல்டி ஸ்டாரர் படங்களில் அதிகம் நடித்தவர் அப்பாஸ்தான். பிரசாந்த், அஜித், மாதவன் இவர்கள் வரிசையில் இளம் நங்கைகளை ரசிகைகளாக அதிகமாக வைத்தவர் இவர்தான். காதலுக்கு  மரியாதை, ஜின்ஸ் போன்ற படங்களில் முதலில் நடிக்க வேண்டியது அப்பாஸ்தான்.

ஆனால் அவரின் மேனேஜர் செய்த சதி. அந்தப் பட வாய்ப்புகள் பற்றி தெரியாமலேயே மறைத்திருக்கிறார். அந்தப் படங்களில் மட்டும் நடித்திருந்தால் இன்று அப்பாஸின் ஸ்டேட்டஸ் வேற மாதிரி இருந்திருக்கும். அதன் பிறகு விளம்பர படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க : அஜித்தின் அடுத்த படம் ஓடிடியில்!.. படத்தின் பெயர் இதுதானாம்!.. என்னப்பா சொல்றீங்க!…

அதனை தொடர்ந்து நியூஸிலாந்தில் செட்டிலாகிவிட்டாராம். அஜித்தை போன்றே அப்பாஸூக்கும் பைக் மீது அதிக ஆர்வம் உண்டாம். இந்த நிலையில் தனது சொந்த வாழ்க்கையை பற்றி சமீபத்தில் அப்பாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

25 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஆரம்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வருமாம். அவருடைய குழந்தைகளிடமும் மிகவும் கொடூரமாகத்தான் நடந்துப்பாராம் அப்பாஸ். ஒரு மாமியாரை போன்ற செயல்களில் தான் ஈடுபட்டாராம்.

இதையும் படிங்க : விஜயும் இல்ல!.. ரஜினியும் இல்ல!.. அவருக்குதான் முதலிடம்.. வெளியான கருத்துக்கணிப்பு…

மேலும் அவருடைய குழந்தைகளிடம் பேசக்கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசுவாராம். அதனாலேயே ஒரு சமயம் அப்பாஸின் பிள்ளைகள் வீட்டை விட்டே சென்று விட்டார்களாம். அதன் பிறகுதான் எல்லாவற்றையும் யோசித்து மனம் திருந்தி பிள்ளைகளிடம் ஒரு நண்பர் போன்று பழகுகிறாராம்.

Published by
Rohini