அப்பானாலே பயம்!.. படத்தில் நடிக்கும் போது பட்ட கஷ்டங்களை பகிர்ந்த அரவிந்த்சாமி..

Published on: April 1, 2023
ara
---Advertisement---

90களில் பெண்களை மிகவும் கவர்ந்த நடிகராக வலம் வந்தார் நடிகர் அரவிந்த்சாமி. முதன் முதலில் ‘தளபதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் லீடு ரோலில் ‘ரோஜா’ படத்தில் நடித்தார். ரோஜா படம் பெண் ரசிகைகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்தப் படத்தில் அரவிந்த் சாமியை பார்த்ததில் இருந்து பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக மாறினார். அந்த அளவுக்கு நிறம், உயரம், அழகு என அனைத்திலும் சிறந்து காணப்பட்டார் அரவிந்த்சாமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கினார்.

ஆனால் தமிழில் கிடைத்த அந்த அங்கீகாரம் வேறு மொழிகளில் கிடைக்க வில்லை. குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இவர் பிரபல தொலைக்காட்சி நடிகரான டெல்லி குமாரின் மகனும் ஆவார்.ஆனால் வளர்ந்தது எல்லாமே அவரின் மாமா வீட்டில் தானாம்.

அவரது தந்தை டெல்லி குமார் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பவர். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மெட்டில் ஒலியில் நடித்திருக்கும் அப்பா கதாபாத்திரம் தான் அரவிந்த் சாமியின் அப்பா ஆவார். சிறு வயதில் இருந்தே அரவிந்த்சாமிக்கு அவரது அப்பா என்றாலே பயமாம்.

ரோஜா படத்தில் வரும் ‘புது வெள்ளை மழை’ பாடலை தியேட்டரில் அவரின் அப்பாவுடன் உட்கார்ந்து பார்க்கும் போது அவருக்கு ஒரே embarrasing ஆக இருந்ததாம். அதனால் வாஷ் ரூம் போய் விட்டு வருகிறேன் என்று வெளியிலேயே இருந்தாராம்.

10, 15 நிமிடம் கழித்து தான் மீண்டும் தியேட்டருக்குள் வந்தாராம் அரவிந்த் சாமி. இந்த அளவுக்கு பயம் உள்ள நடிகர் தனி ஒருவன், போகன் படங்களில் ரசிகர்களை மிரட்டியிருப்பார். பொதுவாக வில்லன் கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு செட் ஆகிவிடுகிறது.

இதையும் படிங்க :25 வருட நண்பர் முரளியே என்னை ஏமாத்திட்டார்!. குமுறும் தேவயாணி கணவர்!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.