நடிகர் அர்ஜூனுக்கு இந்த நிலமையா?.. ரசிகர்கள் அதிர்ச்சி...
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் முதலே கொரோனா தொற்று பரவ துவங்கியது. அதன்பின் படிப்படியாக அது அதிகரித்து கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா 2வது கொஞ்சம் ஓய்ந்துள்ள நிலையில் ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது. ஒரு பக்கமும் கொரோனா வைரஸாலும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் மீண்டார்.
இந்நிலையில், நடிகர் அர்ஜூன் சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அர்ஜூன் கடந்த பல மாதங்களாகவே சர்வைவர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு வட ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. எனவே, இது தொடர்பாக விமான பயணம் மேற்கொண்டதில் அவர் கொரோனவால் பாதிக்கப்பட்டாரா தெரியவில்லை.
இந்த தகவலை பகிர்ந்துள்ள அர்ஜூன் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.