லியோ’வில் இப்படி ஒரு கண்டீசனா? வில்லனா நடிக்க இதுதான் காரணமா? attitude காட்டும் அர்ஜூன்
கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசிக் கொண்டு வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தை லோகேஷ் இயக்க விஜய் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்,
படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் இன்னும் மன்சூர் அலிகான் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டால் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை எட்டிவிடும் என கூறுகின்றனர். படத்தில் விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத் நடிப்பதாகவும் கூறுகிறார்கள். ஆக்ஷன் கிங் அர்ஜூன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
சமீபகாலமாக அர்ஜூன் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அதுவும் ஒரு விதத்தில் ரசிகர்களால் வரவேற்க்கப்படுகின்றன. ஆனால் வில்லனாக நடிக்க சில கண்டீசன்களை போட்டுத்தான் நடிப்பாராம் அர்ஜூன். இதற்கு முந்தைய படங்களிலும் அப்படித்தான் கண்டீசன் போட்டாராம்.
லியோ படத்தில் அந்த கண்டீசன் தொடர்ந்திருக்கிறது. அதாவது ஒரு ஹீரோவாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டவர் அர்ஜூன். அதுமட்டுமில்லாமல் கராத்தே உட்பட பல கலைகள் தெரிந்தவர். அதனால் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கவேண்டுமென்றால் ஹீரோவிடம் அடிவாங்கும் விதமான காட்சிகள் இருக்கக் கூடாது என்று கூறுவாராம்.
அதே சமயத்தில் இரு பக்கமும் சமமான சண்டைக் காட்சிகளே இடம்பெற வேண்டும் என கூறுவாராம். ஏனெனில் ஒரு ஆக்ஷன் கிங்காக பார்க்கப் பட்ட அர்ஜூனா இப்படி அடி வாங்குகிறார் என்று ரசிகர்கள் சொல்லக் கூடாது என்ற காரணத்தினாலேயே இந்த கண்டீசன்களை எல்லாம் போட்டுத்தான் நடித்தாராம் லியோ படத்தில்.