---Advertisement---

உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால்…பரபரப்பை ஏற்படுத்திய அர்ஜூன் தாஸ் பதிவு

Published on: March 13, 2026
arjun dass
---Advertisement---

நடிகர் அர்ஜுன் தாஸ் தனது தனித்துவமான மற்றும் கம்பீரமான கணீர் குரலால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி பட்ம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து விக்ரம், மாஸ்டர் என லோகேஷின் ஆஸ்தான நடிகரானார். சமீபத்தில் வெளியான அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் இவரது நடிப்பை கொண்டடினார்கள்.

இந்த நிலையில் அர்ஜூன் தாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி வைத்திருந்தார். அந்த பதிவில்,

ஒருவரை மிகவும் காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால்… அதிலிருந்து ஒருவர் எப்படி முன்னேற முடியும்? என்ற உணர்ச்சிப் பூர்வமான வரிகள் இடம்பெற்றிருந்தன. இந்த பதிவு சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதைப் பார்த்த பலரும், அர்ஜுன் தாஸ் உண்மையில் மனவேதனையில் இருக்கிறாரா? அல்லது புதிய படத்திற்கான புரமோசனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த காலத்திலும் அர்ஜூன் தாஸின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியிருந்தன. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு, அவர் ஒரு பெண்ணுடன் வெளியே சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் அந்த பெண் யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது அவர் பகிர்ந்த இந்த பதிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து நடிகர் எந்த விளக்கமும் அளிக்காததால், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.