மகள் நிச்சயம் முடிந்த சந்தோஷத்தில் நம்ம ஹரால்டு தாஸ்! என்னமா ஸ்டைலா இருக்காரு பாருங்க

arjun
Actor Arjun : தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜூன். 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஒரு தேசப்பற்று மிக்க கதாபாத்திரத்தில் நடித்ததனாலேயே மக்கள் இவரை ஒரு தேசபக்தர் அளவுக்கு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

arjun
அதுமட்டுமில்லாமல் இவர் பிறந்ததும் ஆகஸ்ட் 15 ஆம் நாள்தான். சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஹரால்டு தாஸ் என்ற ஒரு கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார் அர்ஜூன்.
இந்த நிலையில் இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். இதனிடையில் இவர்கள் திருமணத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

arjun
இந்த நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் இன்று உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. அந்த நிச்சயதார்த்தத்தில் தன் மகளை பார்த்து அர்ஜூன் மிகவும் சந்தோஷப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லியோ படத்தில் கொடூர வில்லனாக பார்த்த அர்ஜூன் தன் மகள் நிச்சய விழாவில் சொல்லமுடியாத சந்தோஷத்தில் இருப்பதை பார்க்கும் போது ஒரு அப்பாவாக தன் மகள் மீது எந்தளவு பாசத்தை வைத்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது. அதுமட்டுமில்லாமல் படு ஸ்டைலாக பார்க்க மிகவும் அழகாக காணப்படுகிறார் அர்ஜூன்.

arjun