இதுவரை இல்லாத கெட்டப்பில் அர்ஜூன்!.. லியோ படத்துல சிறப்பான சம்பவம் இருக்கு!..
தற்போது இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஏனெனில் அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களின் தாக்கம் திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் இயக்கும் படங்களை LCU என ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர். அவர்கள் பார்த்திராத ஒரு உலகத்தை லோகேஷ் திரையில் காட்டுவதால் அவர் இயக்கும் படங்களை LOKESH UNIVERSE என ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.
தற்போது மீண்டும் விஜயை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. விஜயும் லோகேஷும் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
லோகேஷின் மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் மல்டி ஸ்டார்கள் நடிக்கவுள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பாபு ஆண்டனி, அபிராமி வெங்கடாச்சலம், திரிஷா, நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். அதேபோல், இப்படத்தில் மொத்தம் 4 வில்லன்கள் நடிக்கவுள்ள நிலையில் அதில் ஒரு வில்லனாக நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளார். விஜயுடன் முதன் முதலாக அஜித் நடிக்கவுள்ளார்.
பொதுவாக அர்ஜூன் இதுவரை ஹேர் ஸ்டைலிலும், தோற்றத்திலும் அர்ஜூன் இதுவரை எந்த மாற்றமும் செய்தது இல்லை. ஆனால், லியோ படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அர்ஜூன் தோன்றவுள்ளாராம். அனேகமாக முடி கொஞ்சம் வளர்த்தும், கண்ணில் காண்டாக்ட் லென்ஸும் வைத்தும் வேற லெவல் லுக்கில் வரப்போகிறாராம்.
இந்த செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.