டைரி மூலம் அர்ஜூனுக்கு கிடைத்த வாய்ப்பு!.. வாழ்க்கையையே மாத்தின சூப்பர் ஹிட் படம்!..
தமிழ் சினிமாவில் 80களில் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். அர்ஜூன் படம் என்றால் சண்டை காட்சிகள் சும்மா தூள் பறக்கும். 1987ம் வருடம் வெளியான ‘சங்கர் குரு’ திரைப்படத்தின் வெற்றி இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. அர்ஜூன் படம் என்றால் அவரின் குடும்பத்தில் ஒருவரை வில்லன் கொன்று விடுவார். எனவே, அவரை தேடிப்பிடித்து பழி வாங்குவார். பெரும்பலான படங்களில் இதுதான் கதையாக இருக்கும்.
சண்டை காட்சிகளில் அசத்தலாக நடிப்பதால் இவருக்கு ஆக்ஷன் கிங் எனவும் பட்டம் கொடுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் இயக்குனராகவும் அர்ஜூன் மாறினார். அவரே கதை, திரைக்கதை எழுதி, அவரே அப்படத்தை தயாரிக்கவும் செய்தார். ஜெய்ஹிந்த், பிரதாப் என சில படங்களை இயக்கினார். அதில், சில படங்களில் சண்டை காட்சிகள் மட்டுமே நன்றாக இருந்தது. படம் ஓடவில்லை. ஒருகட்டத்தில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.
அப்போதுதான் இயக்குனர் ஷங்கர் தனது முதல் படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார். குஞ்சுமோன் தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஜென்டில்மேன் கதையை உருவாக்கினார். இந்த கதையை கமல்ஹாசன், சரத்குமார் என பலரிடமும் அவர் கூறினார். ஆனால்,யாரும் நடிக்க முன்வரவில்லை. விஜயகாந்திடம் சொல்லக்கூட அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். ஆனால், எதுவும் சரியாக அமையவில்லை.
விரக்தியில் சினிமா டைரியை புரட்ட துவங்கினார். அதில் முதல் பெயரே அர்ஜூன் என இருந்தது. சரி இவரையே கேட்போம் என முடிவுசெய்து அர்ஜூனை சந்தித்து கதை சொன்னார். அர்ஜூனுக்கும் கதை பிடித்துப்போக அப்படி உருவான திரைப்படம்தான் ஜென்டில்மேன். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து அர்ஜூனுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. மீண்டும் ஹீரோவாக ஒரு பெரிய ரவுண்டு வந்தார்.
சினிமா டைரி என்பது நடிகர்களின் விபரங்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். அதில், அவர்களை தொடர்பு கொள்ளும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2 வயசில் இருந்தேவா? மேடையில் ரஜினிக்காக மாஸ் காட்டிய அனிருத் – ஓடி வந்து கட்டியணைத்த தலைவர்