ஷங்கரையே மிஞ்சிருவாரு போல! மகள் திருமணத்திற்காக பிரம்மாண்ட செட் போடும் அர்ஜூன்.. எங்கு தெரியுமா?
Actor Arjun: தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக வலம் வருபவர் நடிகர் அர்ஜூன். தேசப்பற்று மிக்க படங்களில் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு சிறந்த நடிகராக வலம் வருகிறார். 90களில் டாப் ஹீரோவாக ஜொலித்த அர்ஜூன் குஷ்பூ, ரம்பா, மீனா போன்ற முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்தவை. அதுமட்டுமில்லாமல் ஜெண்டில்மேன், முதல்வன் போன்ற படங்கள் அர்ஜூனின் கெரியரை எங்கேயோ கொண்டு சென்ற படங்களாக அமைந்தன. அதிலிருந்தே அவரின் மார்கெட் உயரத்தொடங்கியது.
இதையும் படிங்க: விஜயின் கோட் படத்தில் நடிக்க இருக்கும் விஜயகாந்த்… குடும்பம் சொன்ன பதில் என்ன தெரியுமா?
சமீபத்திய படங்களில் அர்ஜூன் வில்லனாக குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். லியோவில் ஒரு முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார். இப்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அர்ஜூன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் தம்பிராமையா மகனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக அந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என முக்கியமான ஒரு சில பேர் மட்டும் அந்த நிச்சயதார்தத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மியூசிக் கான்சர்ட் வந்ததே அதுக்கு தான்.. ரசிகர்களிடம் அத்துமீறிய பிரபல பாடகர்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…
ஐஸ்வர்யாவும் உமா பாரதியும் ஒருவரையொருவர் காதலிக்க இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் ஜூன் 10 ஆம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான தோட்டத்தில் தான் நடைபெற இருக்கிறதாம்.
அர்ஜூனுக்கு இருக்கும் செல்வாக்கு தம்பி ராமையாவுக்கு இருக்கும் செல்வாக்கு இவற்றை பார்க்கும் போது திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதனால் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான செட் அமைத்து மகள் திருமணத்தை நடத்த இருக்கிறாராம் அர்ஜுன்.
இதையும் படிங்க: பராசக்தி படம் பார்க்க தியேட்டருக்கு போன சிவாஜி!. சிறுவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்துபோன நடிகர் திலகம்..