காக்கா - கழுகு கதை.. சூப்பர்ஸ்டார் பட்டம்.. லெஜெண்ட் சரவணா என்ன சொல்றாரு பாருங்க!..

Legend saravanan: என்னதான் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் சிலர் மக்களிடையே பிரபலமாவதில்லை. அவ்வாறு பிரபலமாக வேண்டும் எனும் நோக்கத்தில் பல தொழிலதிபர்கள் தங்களை தாமே எதோ ஒரு வகையில் விளம்பரபடுத்தி கொள்கின்றனர்.

அவ்வாறு தன்னை தானே விளம்பரபடுத்தி கொண்டவர்தான் பிரபல துணிக்கடை நிறுவன உரிமையாளரான அருள் சரவணன். இவர் தன்னை விளம்பரபடுத்தி கொள்ள இவரது கடை விளம்பரங்களில் இவரே நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் வாசிங்க:இவங்கலாம் பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாது!.. லோகேஷ் கனகராஜை சீண்டும் சந்தானம்!..

இதன் பின் ஒருபடி தாண்டி சினிமாவில் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இவரது சொந்த தயாரிப்பில் இவர் நடித்த திரைப்படம்தான் தி லெஜண்ட். இப்படத்தை இயக்குனர் ஜெர்ரி இயக்கியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி ரெளட்டுல்லா நடித்திருந்தார்.

இப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தரவில்லை என்றாலும் இவர் மக்களிடையே பிரபலமாக இது ஒரு ஊன்றுகோலாக அமைந்தது. இப்படத்திற்கு பின் இவர் மக்களிடையே பிரபலமானார். மேலும் இப்படத்தில் விவேக், சுமன், நாசர் போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர்.

இதையும் வாசிங்க:விஜய் ஷாருக்கான விட இவர்தான் எனக்கு ரொம்ப முக்கியம்… என்னப்பா அட்லி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட!…

இது மட்டுமல்லாமல் இவர் அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாக ஆரம்பித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையில் கூட ஆட்டோ டிரைவர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகியது.

இவர் சமீபத்தில் நடைபெற்ற வணிகர் சங்க தலைமை கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய சரவணன் இன்று மக்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா துறை மிகவும் வளர்ச்சியடைந்து வருவதாகவும், மேலும் அதில் காக்கா கழுகு, இவருக்கு இந்த பட்டம், அவருக்கு அந்த பட்டம் என எதுவும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே நமக்கு நல்லது, நமது நாட்டிற்கும் நல்லது என காக்கா கழுகு சர்ச்சை குறித்து தனது கருத்தினை கூறியிருந்தார்.

இதையும் வாசிங்க:உதவி செய்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நடிகர்.. அந்த பொண்ணு சொன்னதுதான் ஹைலைட்!…

Related Articles
Next Story
Share it