Categories: latest news

வாரிசு நடிகரா இருந்தாலும் விஜய் பண்ண தப்ப நான் பண்ணல.. என்ன சொல்றாரு அருண்விஜய்?

Arun Vijay:தமிழ் சினிமாவில் அருண் விஜய் இப்போது ஒரு டாப் நடிகராக இருந்து வருகிறார். இருந்தாலும் விஜய் அஜித் சூர்யா இவர்கள் ரேஞ்சுக்கு தன்னுடைய அந்தஸ்தை உயர்த்த வேண்டும் என்பதில் மிகவும் போராடிக் கொண்டு இருக்கிறார். அதற்காக அவருடைய கடின உழைப்பு விடா முயற்சி இவற்றை என்றைக்குமே அவர் விட்டதில்லை. தொடர்ந்து அந்த இடத்தை அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அடுத்தடுத்த முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.

அதற்கு ஏற்ற வகையில் அவர் சமீப காலமாக தேர்ந்தெடுக்கும் கதைக்களம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் பெரிதாக கொண்டாடப்படவில்லை .ஒரு லவ்வர் பாயாகவே ஒரு சில படங்களில் நடித்து வந்த அருண் விஜய் என்னை அறிந்தால் திரைப்படம் தான் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

இதையும் படிங்க: ராமராஜன், மோகனுடைய படங்கள் எல்லாம் இப்ப எடுபடுமா…? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்..?

அஜித்துக்கு வில்லனாக விக்டர் என்ற கதாபாத்திரத்தில் ஒரு மாசான வில்லனாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த படத்தில் தோன்றி இருப்பார் அருண் விஜய். அந்த ஒரு படம் தான் அவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது. அதற்கு அடுத்து பல திரைப்படங்கள் அவருடைய லைன் அப்பில் வர அதில் ஹீரோவாக நடித்து இன்று ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார் அருண் விஜய்.

இந்த நிலையில் அவருடைய ஒரு பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. வாரிசு நடிகராக இருந்தாலும் அதாவது என்னுடைய அப்பா ஒரு நடிகராக குணச்சித்திர நடிகராக இருந்தாலும் சினிமாவில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை நானே கற்றுக்கொள்ள வேண்டும் என என்னை விட்டு விட்டார் .

இதையும் படிங்க:என் படத்தை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னது!.. நெகிழும் மைக் மோகன்!…

ஆனால் விஜய்க்கு ஒரு பேக்கப் இருந்தது, அதாவது அவருடைய அப்பா எஸ் ஏ சி சார் ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக என்று ஒரு பேக்கப் இருந்தது ,அந்த ஒரு பாணியில் அவர் வந்தார், ஆனால் என்னுடைய அப்பா என்னை என் வழியில் விட்டுவிட்டார் என்பது மாதிரி அந்த பேட்டியில் கூறுகிறார், அந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது,இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அருண் விஜயை கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்,

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

8 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

15 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

16 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

17 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago