ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு போற அளவுக்கு என்ன நடந்தது? ஃபோட்டோ போட்டு ஷாக் கொடுத்த அருண்விஜய்
Actor Arunvijay: தமிழ் சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு கலைஞரும் எப்படியாவது சாதிக்க வேண்டும். தான் கொண்ட இலக்கை அடைய வேண்டும் என்று எண்ணியே நடிக்க வருகிறார்கள். அதற்காக அவர்கள் படும் பாடு சொல்லிமாளாது. அந்த வகையில் நீண்ட வருடங்களாக முயற்சித்தும் இன்னும் அந்த முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை அடைய முடியாமல் தவித்து வரும் நடிகராக அருண் விஜய் இருக்கிறார்.
சூர்யா, கார்த்தி, தனுஷ் இவர்களுக்கு முன்பாகவே சினிமாத் துறையில் வந்தவர் அருண்விஜய். ஆனால் அவருக்கென்று சரியான கதை அந்த நேரத்தில் அமையாததால் கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்ற காரணத்தினால் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க: படத்த ரிலீஸ் பண்ண விடாம டார்ச்சர்! 30 கோடி நஷ்டம் கேட்கும் சிம்பு.. மனக் குமுறலில் தயாரிப்பாளர்
அதன் பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவருக்காக படைக்கப்பட்ட கதாபாத்திரம்தான் விக்டர். ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் அருண் விஜயின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. அதுவும் வில்லன் அவதாரத்தில் தோன்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டினார். அதிலிருந்தே தொடர்ந்து பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு அருண்விஜய்க்கு வர அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
அவர் நடிக்கும் சமீபகால படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்போது கூட இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘மிஷன் சாப்டர் 1’. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்திருக்கிறது. பட ப்ரோமோஷனில் கூட கையில் கட்டுடன் அருண்விஜய் வந்து தன் படத்திற்கான ப்ரோமோஷன்கள் வேலையை பார்த்தார். ஒரு வேளை மிஷன் படத்தில் ஏற்பட்ட காயமா என்று கேட்டதுக்கு ‘இல்லை அது வேறொரு படத்தின் சூட்டிங்கில் ஸ்டண்டில் ஈடுபடும் போது ஏற்பட்டது’ என கூறினார்.
இதையும் படிங்க: ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி – கமல் நடிக்கவிருந்த படம்!.. டிராப் ஆனதுக்கு காரணம் இதுதான்!..
அதிலிருந்தே தெரிந்தது. அது கண்டிப்பாக பாலாவின் வணங்கான் திரைப்படம்தான் என்று. இந்த நிலையில் அருண்விஜய் தன் இன்ஸ்டா பக்கத்தில் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார். அவர் அடிப்பட்ட சமயத்தில் ஹாஸ்பிட்டல் கொண்டு போகும் மாதிரியான படங்களை வெளியிட்டிருக்கிறார். அதோடு ‘மிஷன் படத்திற்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு மிக்க நன்றி. ’,
‘ ஸ்டண்ட் செய்யும் போது பல எலும்பு முறிவுகள் மற்றும் தசைநார் கிழிந்ததால் கடந்த 2 மாதங்களாக நான் அனுபவித்த வலியை நீங்கள் மறக்க செய்து விட்டீர்கள். விரைவில் தயாராகி மீண்டும் நல்ல முறையில் செயல்பட உங்கள் அன்பு என்னை மேலும் வலுவாக்கியுள்ளது. அனைவருக்கும் நன்றி!’ என்று பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…