Actor Arun Vijay: சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு கிடைக்காதா என்று வருபவர்கள் ஏராளம். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அதை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் 90களில் இருந்து நடித்து இன்னமும் தனக்குரிய அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார் நடிகர் அருண்விஜய்.
நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் விஜயகுமார் அளவுக்கு ஒரு நிலையான இடத்தை அருண்விஜயால் பெறமுடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தவருக்கு அவ்வப்பொழுது ஒரு சில படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: கமலுக்கு இருந்த வைராக்கியம்.. ரத்த வாந்தி எடுத்தான்.. பாரதிராஜா சொன்ன அதிர்ச்சி சம்பவம்…
ஆனால் அந்தக் காலத்தில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் போதிய வரவேற்பை பெற வில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ஒரு பெரிய திருப்பு முனையை அருண்விஜய்க்கு ஏற்படுத்தியது.
அந்தப் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் வில்லன் ரோலில் நடித்து அசத்தினார் அருண்விஜய். அதிலிருந்து அருண்விஜயின் மவுசு உயர ஆரம்பித்தது. எங்கே போனாலும் விக்டர் விக்டர் என கத்த ஆரம்பித்தனர். அந்தப் படத்தின் வெற்றி அருண்விஜய்க்கு தொடர்ந்து பல நல்ல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை தேடிக் கொடுத்தது.
இதையும் படிங்க: சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் டிராப் ஆகிறதா?!.. என்னப்பா சொல்றீங்க?!.. நடப்பது என்ன?..
இந்த நிலையில் பொங்கல் ரிலீஸாக அருண்விஜயின் மிஷன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்போது புதுச்சேரியில் ரசிகர்களுடன் படம் பார்க்க அருண்விஜய் மிஷன் திரைப்படத்தை பற்றி கூறினார். கூடவே விக்டர் கதாபாத்திரத்தை பற்றியும் கூறினார்.
அதாவது வில்லனாக நடிக்க பல படங்களில் வாய்ப்பு வந்ததாம். ஆனால் விக்டர் கதாபாத்திரம் மாதிரி வெயிட்டாக இல்லையாம். அதனால் வந்த வில்லன் கதாபாத்திரங்கள் எல்லாம் அவருக்கு திருப்தியாக இல்லாததால் அந்தப் படங்களில் வில்லனாக நடிக்க முடியவில்லை என்று கூறினார்,
இதையும் படிங்க: டாப் மேல புடவையை சுத்தி என்ன செல்லம் இது!.. பொங்கல் ட்ரீட் வைத்த ஷிவானி நாராயணன்..
Rajkumar periyasamy:…
நடிகர் விஜயை…
Vignesh Shivan:…
Sorgavaasal: ஆர்.ஜே.பாலாஜியின்…
Vidamuyarchi: நேற்று…