ஆர்யா என் வீட்ட இடிச்சிட்டான்!.. மேடையில் ஓப்பனா பேசிட்டாரே சந்தானம்!…

by சிவா |   ( Updated:2025-05-05 23:38:33  )
santhanam
X

#image_title

காமெடி மன்னன் கவுண்டமணியின் ஸ்டைலை பின்பற்றி தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சந்தானம். கவுண்டமணி ஃபீல்டிலிருந்து ஒதுங்கிய நேரம் சரியாக அந்த இடத்தை பிடித்தார். கவுண்டமணியை போலவே கவுண்ட்டர் கொடுப்பதுதான் சந்தானத்தின் ஸ்டைல். அவரின் காமெடி நன்றாக வொர்க் ஆவுட் ஆக அவருக்கென ஒரு மார்க்கெட் உண்டானது.

தனி டிராக் காமெடி செய்யாமல் துவக்கத்தில் இருந்தே ஜீவா, ஆர்யா, சிம்பு, விஷால் போன்ற நடிகர்களுடன் அவர்களின் நண்பனாக அடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜீவாவுடன் நடித்த சிவா மனசுல சக்தி, ஆர்யாவுடன் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடியது.

ஆர்யாவுக்கும் சந்தானத்திற்கும் பல வருட நட்பு உண்டு. ஆர்யா சினிமாவில் நடிக்க துவங்கியது முதலே அவருடன் சந்தானம் நடித்து வருகிறார். 2005ம் வருடம் வெளியான ஒரு கல்லூரியின் கதை என்கிற படத்திலும் ஆர்யாவின் நண்பர்களில் ஒருவராக சந்தானம் நடித்திருப்பார். எனவே, கடந்த 20 வருடங்களாக இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

#image_title

ராஜா ராணி, சேட்டை, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களிலும் ஆர்யாவுடன் சந்தானம் நடித்திருக்கிறார். இந்நிலையில், சிம்புவின் புதிய படத்த்தில் நடிக்கும் சந்தானம் அந்த பட விழாவில் பேசியபோது ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.

நான் ஒரு இடம் வாங்கினேன். அதில் ஒரு சின்ன வீடு இருந்தது. அந்த வீட்டிற்கு குடி போய்விடலாம் என நினைத்தேன். என் அம்மாவும், தங்கச்சியும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கு சென்று விளக்கி ஏற்றி வந்தனர். அந்த வீட்டை பார்க்க வந்த ஆர்யா ‘மச்சான் இந்த வீடு நல்லா இல்ல. இடிச்சிட்டு புதுசா கட்டுவோம்’ என சொன்னான். உடனே யாருக்கோ போன் பண்ணினான். 3 நாட்களில் வீடை இடித்து தரை மட்டம் ஆக்கிவிட்டனர். என் அம்மாவிடம் இதை நான் சொல்லவில்லை. விளக்கு ஏற்ற வந்த என் அம்மா வீட்டை தேடியிருக்கிறார். தவறாக வந்துவிட்டோமோ என நினைத்து பக்கத்து தெருவிலெல்லாம் போய் தேடியிருக்கிறார்.

எனக்கு போன் செய்தார். நான் நேரில் சென்று ‘ஆர்யா வீட இடிச்சிட்டு மறுபடி கட்டலாம்னு சொன்னான். அவன் சொன்னா சரியாதான்மா இருக்கும்’ என என் அம்மாவை சமாதானம் செய்தேன். அதற்கு என் அம்மா ‘ஏன்டா நீயும், அவனும் சினிமாவுலதான் இப்படி பண்ணுவீங்கன்னா நிஜத்திலயும் இப்படித்தானா?’ எனக்கேட்டார். அப்படிப்பட்டவன்தான் ஆர்யா’ என ஜாலியாக பேசினார். சந்தானம் பேசுவதைக்கேட்டு மேடையில் இருந்த சிம்புவும், ஆர்யாவும் சிரித்துக்கொண்டே இருந்தனர்.

Next Story