வரிசை கட்டி நிற்கும் ஓடிடி நிறுவனம்..! புத்திசாலித்தனமாக செயல்பட்ட நடிகர் ஆர்யா...
படத்திற்கு படம் வித்தியாசமான கதையை ஏற்று நடித்து தான் ஒரு திறமையான நடிகர் என்பதை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும் வலம் வருகிறார். ஆரம்பத்தில் காதலை மையமாக கொண்ட படத்திலயே நடித்து வந்த ஆர்யா தற்போது சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக வந்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அதையடுத்து வந்த டெடி என்ற படம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட கதையாகும்.
அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஆர்யாவும் விஷாலும் சேர்ந்து நடித்த எனிமி என்ற படம் ஓரளவு பேசப்பட்டது. அதுவும் நேர்மறையாக விமர்சனத்திற்கு தான் ஆளானது. இப்படி இவரின் நடிப்பில் வந்த தொடர்ச்சியான படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் அடுத்து வரும் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
இதையும் படிங்களேன் : கள்ளக்காதலா…? சயீஷாவிடம் செருப்படி வாங்கப்போகும் ஆர்யாவின் முன்னாள் காதலி!
இவரின் நடிப்பில் தயாரான படமான கேப்டன் என்ற படம் கூடிய சீக்கிரம் மக்களை சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் இவரின் படங்களின் வெற்றியை பார்த்த பிரபல ஓடிடி நிறுவனங்கள் இந்த கேப்டன் படத்தை ஓடிடியில் வெளியிடுமாறு கேட்டு வருகின்றனராம். ஆனால் கேப்டன் படம் ஏழியன் கதையை மையமாக இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கிறாராம் நடிகர் ஆர்யா. ஆதலால் கண்டிப்பாக ஓடிடியில் வெளியிட முடியாது என ஆர்யா மறுத்துவிட்டாராம்.