பவுன்சரோடதான் வருவீங்களா?!.. ஒரு படம் கூட நடிக்கல!.. ஓவர் பந்தா காட்டும் அஸ்வின்...

by சிவா |
ashwin
X

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போதே தெரிந்தது இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்குமென்று. எதிர்பார்த்தபடியே அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஓவர் பந்தா செய்கிறார் என்கிற கெட்டப் பெயரை அவர் எடுத்துள்ளார். புது இயக்குனர்கள் கதை சொன்னால் அப்படியே தூங்கி விடுகிறாராம். தலையில் அடித்து கொண்டு வெளியே வருகிறார்கள் இயக்குனர்கள்.

இதையும் படிங்க: பிரபுதேவா முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், அவரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘என்ன சொல்லப்போகிறாய்’. இப்படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா நடித்துள்ளார். இப்படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்கியுள்ளார்.

ashwin

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அஸ்வினும், புகழும் வந்த போது அவர்களை சுற்றி ஏராளமான பவுன்சர்கள் உடன் வந்தனர். இது சினிமா செய்தியாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.அஸ்வின் இப்பதான் வளரும் நிலையில் இருக்கிறார். அதற்குள் இவ்ளோ பந்தாவா என அவர்கள் பேச துவங்கியுள்ளனர்.

ashwin

இதை துவங்கி வைத்தவர் சிவகார்த்திகேயன். மான் கராத்தே படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்களோடு சிவகார்த்திகேயன் வந்தது சர்ச்சையானது. எனவே, அதற்கு அப்போது மன்னிப்பு கேட்ட அவர் ‘இது தயாரிப்பாளர் ஏற்பாடு செய்தது. இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்வேன்’ எனக்கூறியிருந்தார். ஆனால், அவர் பெரிய ஹீரோவுடன் மீண்டும் பவுன்சர்களோடு வலம் வர துவங்கினார்.

இதையடுத்து, டிவியிலிருந்து சினிமாவுக்கு நடிக்க வர எல்லாரும் பவுன்சரோடுதான் வருவாங்க போல என சினிமா பத்திரிக்கையாளர்கள் முணுமுணுக்க துவங்கியுள்ளனர்.

Next Story