நடிகர் அஸ்வினுக்கு விரைவில் டும் டும் டும்!. பொண்ணு யாரு தெரியுமா?….

Published on: July 18, 2023
ashwin
---Advertisement---

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபமானவர் அஸ்வின் குமார். ஆனால், அந்த நிகழ்ச்சிகு முன்பே ஆபிஸ், ரெட்டை வால் குருவி, ராஜா ராணி, நினைக்க தெரிந்த மனமே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கோவையை சேர்ந்தவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் சினிமாவிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தது.

aswin kumar

ஓ காதல் கண்மணி, ஜூலை காற்றில், ஆதித்ய வர்மா இந்த நிலை மாறும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஓ மனப்பெண்ணே, என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கமலுக்கும் இவருக்கும் இப்படி ஒரு பஞ்சாயத்து நடந்திருக்கா? அதான் படம் டிராப்பா? மிஷ்கின் சொன்ன சீக்ரெட்

ஒரு சினிமா விழாவில் ‘இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கிவிட்டேன். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது’ என அவர் பேச நெட்டிசன்கள் இவரை வச்சு செய்து விட்டனர். 40 கதை கேட்டு தூங்கிய அஸ்வின் என பல நாட்கள் இதை சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டு அவரை நக்கல் அடித்தனர். இதையடுத்து அஸ்வின் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

aswin kumar

இந்நிலையில், அஸ்வினுக்கு திருமணம் நடக்கவுள்ளது. ஒரு தயாரிப்பாளரின் மகளை அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் எனவும், விரைவில் அது யார்? மணப்பெண் யார்? என்கிற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: என் மனைவியை யாரும் தொட்டு நடிக்க கூடாது! எம்ஜிஆர் படத்திற்கே உத்தரவா? நடிகையின் கணவனால் ஏற்பட்ட சலசலப்பு

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.